இன உறவுகள்

 1. டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்

  எத்தியோப்பியா

  தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

  எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை.

  கடந்த வாரத்தில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி(டி.பி.எல்.எஃப்) அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா தெரிவித்தார்.

  11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

  இதுவரையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.

  பின்னணி என்ன?

  1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே.

  2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

  அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

  ஆனால் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் பெருக்குவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

  கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

  அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார் அபிய் அகமது.

  போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 2. ஜோ பைடன்

  "உங்களிடம் சில விஷயங்கள் உள்ளன, எங்களிடம் சில விஷயங்கள் இருக்கின்றன. நாம் உண்மையில் ஒருவர் மற்றவரை முழுமை அடையச்செய்கிறோம். இந்த தசாப்தத்தில் நமது வணிகம் மிக முக்கியமானதாக இருக்கும் என நான் பார்க்கிறேன்."என்றார் மோதி.

  மேலும் படிக்க
  next
 3. பேருந்து

  பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய் கேட்டு அவரது தந்தை வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்

  யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார்

 5. ஹிட்லர்

  இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

  மேலும் படிக்க
  next
 6. பல்ஸ் ஆக்சிமீட்டர்

  இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு, கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள் மற்றும் பிற இன சிறுபான்மை குழுக்குள் பல்ஸ் ஆக்சிமீட்டர்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளபோதும் சுகாதார துறை அதிகாரிகளிடம் அறிவுரை கோர வேண்டும் என்று கோரியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ஜுபைர் அஹமது

  பிபிசி செய்தியாளர்

  பெண்

  சூறையாடப்பட்ட, தீ வைக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் பெரும்பாலானவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர்களுக்குச் சொந்தமானவையே. இந்த வன்முறையின் இலக்கு தாங்கள்தான் என்று அந்தச் சமூகத்தினர் உணர்ந்து கொண்டனர்.

  மேலும் படிக்க
  next
 8. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

  ஸ்காட்

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

  இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

  இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

  கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.

  ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

 9. சாண்ட்ரின் லங்கம்பு

  பிபிசி உலக சேவை

  ஜார்ஜ் பிளாய்டு

  ஜார்ஜ் ஃபிளாய்டின் கொலைக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் ஷாவினுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அமெரிக்க நீதி அமைப்பு செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்றால் ஜார்ஜ் ஃபிளாயிட் இன்னும் உயிருடன் இருந்திருப்[பார் என்று மற்றவர்கள் கருதுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 10. REUTERS

  சில நிமிடங்களுக்குப் பிறகு எனது மகன் டான்டேவுடன் அதே காரில் பயணம் செய்த அவனது தோழியின் செல்பேசியை நான் அழைத்தபோது, எனது மகன் உயிரற்று சாலையில் கிடப்பதாக அந்த பெண் தெரிவித்தார் என்று டான்டேவின் தாய் கேட்டி கூறினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3