ஆம் ஆத்மி கட்சி

 1. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

  FARMERS
  Image caption: ராகேஷ் கெய்த், பாரதிய கிசான் யூனியன் தலைவர்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூலை 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட நகர அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்ட இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் கெய்த், "200 விவசாயிகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பேட்ஜுகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்று கூறினார்.

  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒரே இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதனால் எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்க எந்த எழுத்துபூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ஜூலை 22ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி தருவதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை நகர அரசு வழங்கியிருக்கிறது.

  இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  View more on twitter
 2. அகிலேஷ் யாதவ் ஆம் ஆத்மி எம்பியுடன் சந்திப்பு

  சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை இன்று சந்தித்தார்.

  அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் கூட்டணி குறித்து பேசினார்களா என்ற யூகங்களுக்கு இது வழிவகுத்துள்ளது.

  எனினும் பாஜகவின் அடக்குமுறை கொள்கைகள் மற்றும் அக்கட்சி சமீபத்தில் பெரிய அளவில் வென்ற உத்தரப்பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் ஆகியவை குறித்தே பேசினோம் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 3. கீர்த்தி தூபே

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா

  கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி 25 பேரை கைது செய்த காவல்துறையினர், அந்த சுவரொட்டியை ஒட்டுமாறு கூறியது தாங்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி பகிரங்கமாக ஒப்புக் கொண்ட பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. மணிஷ் சிசோடியா

  இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகக்கூறியுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வேளையில் எவ்வாறு ஒரு கும்பலால் மணிஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் நுழைந்து சூறையாட முடிந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. கன்னையா குமார்

  "தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது," என்று டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. காவல்துறை

  சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்று 36 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி இவ்வளவு பெரிய அளவிலான வன்முறையை எதிர்கொண்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. சிரியாவில் தாக்குதல்

  துருக்கி சிப்பாய்கள் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து இட்லிப் நகரை திரும்ப பெற ரஷ்ய ஆதரவு சிரியப்படைகள் முயற்சி செய்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. டெல்லி வன்முறை

  உளவுத் துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவர், சாக்கடை ஒன்றில் செவ்வாய் இரவு பிணமாக மீட்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. செளதி பெண்

  உலகின் மிக கடுமையான விதிகள் கொண்ட நாடாக கருதப்படும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அந்நாட்டில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

  மேலும் படிக்க
  next
 10. அரவிந்த் கேஜ்ரிவால்: இன்னும் சற்று நேரத்தில் டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார்

  மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2