மருத்துவம்

 1. விக்டோரிய கில்

  அறிவியல் செய்தியாளர்

  லாமா உயிரினம்

  விஞ்ஞானிகள் ஃபிஃபி (Fifi) இரத்த மாதிரியில் மிகவும் சக்திவாய்ந்த நானோபாடிகளை கவனமாக தேர்ந்தெடுத்து சுத்திகரித்தனர். ஒரு குறிப்பிட்ட பூட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் சாவியைப் போல, வைரஸ் புரதத்துடன் மிக நெருக்கமாகப் பொருந்தியவை அவை.

  மேலும் படிக்க
  next
 2. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்கிய பிரிட்டன் - ஆனாலும் தொடரும் குழப்பம்

  கொரோனா
  Image caption: இந்தியாவில் விரிவான பயன்பாட்டில் உள்ளது கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி

  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது பிரிட்டன் அரசு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,

  ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துதான் கோவிஷீல்டு.

  இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் மறுத்த விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை உருவாக்கியது.

  இந்தியாவில் இதுவரை 721 மில்லியன் டோஸ்கள் அளவுக்கு கோவிஷீல்டு மருந்து பயனர்களுக்கு போடப்பட்டுள்ளது.

  இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களுடைய நாட்டுக்குள் வரும் பயணிகளை 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வரும் 4ஆம் தேதி முதல் உட்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது.

  ஆனால், இந்த நடவடிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியது.

  இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

  இந்த விவகாரத்தில் இந்தியாவை பாரபட்சமாக நடத்தும் போக்கு தொடர்ந்தால் அதேபோல இந்தியாவும் எதிர்வினையாற்ற நேரிடும் என்று இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

  இது தொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட விதியிலும் அந்நாட்டு அரசு திருத்தம் செய்தது. அதே சமயம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதை பிரிட்டன் அரசு தெளிவுபடுத்தவில்லை.

 3. கொரோனாவால் இறப்பவர்களுக்கு மாநிலங்கள் மூலம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு: இந்திய அரசு

  கொரோனா மரணங்கள்

  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக மாநில அரசுகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

  இதற்கு முன்பு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்த தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

  இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா நிவாரணப்பணிகள் அல்லது முன்னேற்பாடு நடவடிக்கையின்போது யாராவது இறந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

  அவர்களுடைய மரணத்துக்கு காரணம் கொரோனா தான் என்பது இந்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டிருந்தால் இந்த தொகையை இறந்தவர்களின் குடும்பங்கள் பெறலாம் எஎன்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

  இந்த காப்பீடு கோரல், சரிபார்ப்பு, தொகை வழங்கல் போன்ற நடவடிக்கைகளை எளிதான வகையிலும் விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான கோரல்கள் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விவகாரத்தில் குறைகள் ஏதேனும் இருந்தால், அதை மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, கூடுதல் மருத்துவ அதிகாரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு கையாளும் என்று மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

  மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாதகமாக இழப்பீடு கோரல் முடிவை அந்த குழு வழங்காவிட்டால், அது ஏன் என்பதை எழுத்துபூர்வமாக அந்த குழு பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது அப்போது முதல் இதுவரை நான்கரை லட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  neet exam

  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், மருத்துவக் கவுன்சிலுக்கு இதுபோன்ற அறிக்கையை விடுவதற்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த எல்லா வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 5. நீட் போராட்டம்

  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ் வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக்காணொளி

  குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள 11 வயது சிறுமி ஃபுளோரா, மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கனவை நனவாக்கியிருக்கிறார் ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர்.

 7. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  நீட் மரணங்கள்

  பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் நீட் அறிமுகமான பிறகு 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: நீட் தற்கொலை: குடும்பத்தின், பள்ளியின் கனவை சிதைத்த வேலூர் சௌந்தர்யாவின் முடிவு

  நீட் தற்கொலை: குடும்பத்தின், பள்ளியின் கனவை சிதைத்த வேலூர் சௌந்தர்யாவின் முடிவு

 9. Video content

  Video caption: தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் - இது பற்றி மாணவர்கள் கருத்து என்ன?

  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

 10. நீட் விலக்கு விவகாரத்தில் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்: செ.கு. தமிழரசன்

  ஏ.எம். சுதாகர், சேலம்

  செ.கு. தமிழரசன்
  Image caption: இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசும் அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன்

  நீட் விலக்கு விவகாரத்தில் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார்.

  சேலம் சீல்நாய்க்கன்பட்டியில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

  இதில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை போதிய அவகாசம் கொடுத்து அறிவித்து இருக்கலாம். 48 மணி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு பல இடையூறுகளை ஏற்படுத்தும். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும்.

  நீட் தேர்வு யார் கொண்டு வந்தது என சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர் . மத்திய அரசிடம் தெரிவித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு இப்போது வரவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. நீட் தேர்வால் அப்பாவி குழந்தைகள் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

  இந்தியா முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என்பது இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு. அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை. இதன் பின்னர்தான் நாடாளுமன்றத்தில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டது.

  நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காவிரி பிரச்னைக்கு மாநிலம் முழுவதும் குரல் கொடுத்தது போல் நீட் தேர்வுக்கும் குரல் தர வேண்டும் என்றார் செ .கு. தமிழரசன்.

பக்கம் 1 இல் 71