டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 2020

 1. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

  FARMERS
  Image caption: ராகேஷ் கெய்த், பாரதிய கிசான் யூனியன் தலைவர்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூலை 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட நகர அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்ட இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் கெய்த், "200 விவசாயிகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பேட்ஜுகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்று கூறினார்.

  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒரே இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதனால் எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்க எந்த எழுத்துபூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ஜூலை 22ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி தருவதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை நகர அரசு வழங்கியிருக்கிறது.

  இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  View more on twitter
 2. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  கொரோனா

  உலகின் பல நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தீவிரத்தை உணரத் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது அலையின் உச்சத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. டெல்லி கலவர வழக்கு

  CAA க்கு எதிரான முதல் பெரிய போராட்டத்தை 'சதித்திட்டத்தின் முதல் கட்டம்' என்று காவல்துறை விவரிக்கிறது. குற்றப்பத்திரிகையில், ஒரு 'பாதுகாக்கப்பட்ட சாட்சியை' மேற்கோள் காட்டி, "டிசம்பர் 13 அன்று, உமர் காலித், ஷார்ஜிலை ஆஃசிப் இக்பால் தன்ஹாவுக்கு அறிமுகப்படுத்தி, சாலை அடைப்பு மற்றும் தர்ணாவுக்கு இடையேயான வித்தியாசத்தை விவரித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. விவசாயிகள் போராட்டம்

  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 18ஆம்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளை எதிர்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. தமிழக அரசியல்

  தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் அளித்த அறிக்கைகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. கீர்த்தி துபே

  பிபிசி செய்தியாளர்

  கபில் மிஸ்ரா

  கபில் மிஸ்ராவை ஜூலை 28 ம் தேதி விசாரித்ததாகவும், தாம் எந்த உரையும் நிகழ்த்தவில்லை என்றும் அவர் கூறியதாகவும் `எஃப்.ஐ.ஆர் 59` அதாவது டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. உமர் காலித்

  உமர் காலித்துடன் சேர்த்து பல முக்கிய செயல்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. டெல்லி கலவரத்தில் போலீஸின் பங்கு என்ன? - ஆதாரங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை

  அமைதி வழியில் போராடியவர்களை சிறையில் அடைத்தல் மற்றும் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அறிக்கையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு கூட மனித உரிமை மீறலில் டெல்லி காவல்துறை ஈடுபட்டதாக பதிவாகவில்லை

  மேலும் படிக்க
  next
 9. அரவிந்த் கேஜ்ரிவால்: இன்னும் சற்று நேரத்தில் டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார்

  மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது.

  மேலும் படிக்க
  next
 10. டெல்லி தேர்தல் முடிவுகள்

  2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 38.51-ஆக பாஜகவின் வாக்கு சதவீதம் உள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2