தொழில் முனைவோர்

 1. விமான உதிரிபாக உற்பத்தி - தமிழ்நாட்டுடன் ஜிஇ நிறுவனம் ஒப்பந்தம்

  முரளிதரன் காசிவிஸ்வநாதன், சென்னையிலிருந்து

  tamil nadu news

  தமிழ்நாட்டில் 28,508 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் முதலீடுகள் செய்யப்படவிருப்பதாக தமிழ்நாடு தொழில்துறை தெரிவித்திருக்கிறது. இதில் பல திட்டங்கள் இன்றே துவங்கிவைக்கப்பட்டுள்ளன.

  சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் 17,141 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின.

  மேலும் 4,250 கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டித் துவக்கிவைத்தார். இது தவிர, 7,117 கோடி ரூபாய் மதிப்பிலான 5 தொழிற்திட்டங்களும் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளன.

  தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புவோர் ஓரே இடத்தில் எல்லா அனுமதிகளையும் பெறுவதற்கு ஏதுவாக ஒற்றைச் சாளர இணையதளம் ஒன்றும் துவங்கப்பட்டிருக்கிறது.

  இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் டிட்கோ செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன்படி, ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் துறை மற்றும் விமானத்துறைக்குத் தேவையான விமானங்கள்,அவற்றின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் வகையில் 'சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்' ஒன்றை அமைக்கவிருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திற்கும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்தானது.

  இது தவிர, மின்சார நிலையங்கள், மின்னணு பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தொழிற்பூங்காக்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளித் தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இன்று செய்யப்பட்டன.

  எரிவாயு அடைக்கும் நிறுவனமான ஏ.ஜி & பி பிரதம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் இரண்டாவது கட்டம், காற்றாலைகளுக்கு கியர்களை உற்பத்தி செய்யும் சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆன்செல் ஸ்டெரைல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான அடிக்கல் இன்றுநாட்டப்பட்டது.

  இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு மாறப்போவதாகக் குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு இருந்த காலகட்டத்திலும் தமிழ்நாடு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தெற்காசியாவிலேயே தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே தங்கள் லட்சியம் எனக் குறிப்பிட்டார்.

  "2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம்கோடி அமெரிக்க டாலர்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியாகக் கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் அரசின் குறிக்கோள்" என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில்துவங்கத் திட்டமிட்ட உடனேயே அந்தச் சிந்தனை செயல்பாட்டிற்கு வரும் வகையில் சூழலை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

  தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தி துறைகள் வளர்ந்திருக்கும் நிலையில், மின் வாகன உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென்றும் முதல்வர்குறிப்பிட்டார்.

  தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள முதலீடுகள் அனைத்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் என மாநிலம் முழுவதும் பரவலாக அமையுமெனவும்அரசு தெரிவித்திருக்கிறது.

  தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திவருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதலாவது முதலீட்டாளர்கள் மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடந்தப்பட்டது. இதற்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சரானபிறகு ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்.ஆனால், இந்த முதலீட்டாளர்கள் மாநாடுகளில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறவில்லையென சமீபத்தில் தி.மு.க. குற்றம்சாட்டியிருந்தது.

 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கப்பட்டது

  இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை தனியாகப் பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தனி அமைச்சகத்தின் முயற்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ரெஹான் ஃபசல்

  பிபிசி இந்திக்காக

  நரசிம்ம ராவ்

  "வாகனங்கள் 21 டன் தங்கத்துடன் சென்றன. 35 கி.மீ தூரத்தில் உள்ள சஹார் விமான நிலையத்தில் கான்வாய் நிறுத்தப்பட்டது, அங்கு ஒரு ஹெவி லிஃப்ட் கார்கோ ஏர்லைன்ஸ் விமானம் அதை எடுத்துச் செல்ல வந்தது"

  மேலும் படிக்க
  next
 4. முகேஷ் அம்பானி

  இப்படி ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்த 55,461 கோடி ரூபாயில் 1,722 கோடி ரூபாய் மட்டும் வரியாகச் செலுத்தி இருக்கிறது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதை விகிதச்சாரத்தில் கணக்கிட்டால் ஒட்டுமொத்த லாபத்தில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தி இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. விஷால் ஷுக்லா

  பிபிசி நிருபர்

  அதானி

  அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களின் பங்குகளும் 5 முதல் 25 சதவீதம் வரை சரிந்தன. அதே நேரத்தில், அதானியின் மொத்த சொத்துக்கள் சுமார் ரூ .55,692 கோடி இழப்பைச் சந்தித்தன.

  மேலும் படிக்க
  next
 6. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  கெளதம் அதானி & நரேந்திர மோதி

  2001ஆம் ஆண்டு நரேந்திர மோதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தான், கெளதம் அதானியின் தொழிலும் வியாபாரமும் உயரே பறக்கத் தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 7. சக்திகாந்த தாஸ்

  தனி நபர்கள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில்முனைவோர்கள் வாங்கி இருக்கும் மொத்த கடன் அளவு 25 கோடி ருபாய்க்குள் இருந்து, அவர்கள் இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த ஒரு கடன் மறுசீரமைப்புத் திட்டங்களையும் (06 ஆகஸ்ட் 2020 அன்று அறிவித்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் உட்பட) பயன்படுத்தாதவர்களாக இருந்து, 31 மார்ச் 2021 தேதி வரை முறையாக கடனுக்கான வட்டியைச் செலுத்தி 'ஸ்டாண்டர்ட்' கடனாக இருந்தால் அவர்கள் கடன் மறுசீரமைப்புத் திட்டம் 2.0-ல் பயன் பெறலாம்.

  மேலும் படிக்க
  next
 8. சுவாமிநாதன் நடராஜன்

  பிபிசி

  ஸ்ரீதர் வேம்பு

  ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர், சோஹோ நிறுவனத்தை கடந்த 1996-ம் ஆண்டு அமெரிக்காவின் சிலிகான் வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியாவில் நிறுவினர். க்ளவுட் அமைப்பில் இயங்கும் இந்த மென்பொருள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 9,500 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  கிம் கர்தாஷியன்

  கிம் கர்தாஷியன் DASH என்கிற பெயரில் ஃபேஷன் போடிக் தொடங்கினர். அப்போது எல்லாம் வராத புகழும் ஊடக வெளிச்சமும், 2007-ம் ஆண்டு ரே ஜே என்கிற பாடகருடன், கிம் கர்தாஷியன் நெருக்கமாக இருந்த அந்தரங்க காணொளி வெளியானதும் கிடைத்தது.

  மேலும் படிக்க
  next
 10. தேர்தல்

  வாக்குப் பதிவுக்கு முன்பாக பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற சந்தேகம் இருப்பதால் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மாவட்ட தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குக்குப் பணம் கொடுப்பது தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்கிறார் சத்யபிரதா சாஹூ

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9