மீனவர்

 1. இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி மீனவர் உயிரிழந்ததை கண்டித்த தங்கச்சிமடத்தில் ஆர்பாட்டம்

  மீனவர்கள்
  Image caption: மீனவர்கள் போராட்டம்.

  இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கி மீனவர் உயிரிழந்ததை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினதிலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் 18ஆம் தேதி இரவு இலங்கை யாழ்ப்பாணம் அடுத்துள்ள காரைநகர் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.

  கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் வர முயற்சித்த போது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மீனவர்கள் படகு மீது மோதியதில் மீன்பிடிப் படகு நடுக்கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

  இதில் படகில் இருந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.பின்னர் சுகந்தன், சேவியர் ஆகிய இரண்டு மீனவர்களை உயிருடன் மீட்ட இலங்கை கடற்படையினர் மாயமான மீனவர் ராஜ்கிரணை தொடர்ந்து தேடி வந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் நெடுந்தீவு அருகே காரைநகர் கடற்பரப்பில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

  பிறகு, காங்கேசன்துறை கடற்படை முகாம் மூலம் எடுத்து வரப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலை யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

  அரசாங்க நடவடிக்கைக்குப் பின்னர் உடற்கூராய்வு அறிக்கையுடன் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

  பிறகு, இன்று மாலை அல்லது நாளை காலை கடல் வழியாக இந்தியா கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் இந்திய மீனவர் ராஜ்கிரணை கொன்ற இலங்கை அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கொல்லப்பட்ட இந்திய மீனவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி வழங்க வேண்டும், இந்திய - இலங்கை மீனவர் நல்லிணக்க பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தி மீனவர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காரலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள்; இலங்கை அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 2. இலங்கையில் உள்ள தமிழக மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

  இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலத்தை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார் பாட்டாளி மக்கள ்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் மீனவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சில இடுகைகளையும் பகிர்ந்துள்ளார்.

  View more on twitter
  View more on twitter
 3. பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  தமிழக மீனவர்

  இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. முன்னதாக, கடலில் மூழ்கிய அவரை தேடும் பணியில் இலங்கை, இந்திய கடற்படை ரோந்துக் கப்பல்கள் ஈடுபட்டன. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

  மேலும் படிக்க
  next
 4. புதின்

  பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

  Follow
  next
 5. வந்துகொண்டிருக்கும் செய்திஇலங்கை கடலில் மூழ்கிய தமிழக மீனவரின் சடலம் மீட்பு

  தமிழக மீனவர்
  Image caption: ராஜ்கிரண்

  தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் உடல் இலங்கை கடல் பகுதியில் சற்று முன்பு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

  கடந்த 18ஆம் தேதி கோட்டைபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் மோதியதில் அந்த படகு நடுக்கடலில் படகு மூழ்கியது.

  படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மூன்றாவது மீனவர் மற்றும் படகை ஓட்டிய ராஜ்கிரண் நீரில் மூழ்கினார். அவரை கடந்த இரண்டு தினங்களாக இலங்கை, இந்திய கடற்படையினர் தேடினர்.

  இந்த நிலையில், ராஜ்கிரணின் சடலம், பருத்தித்துறையை அடுத்த காரைநகர் கடற்பரப்பில் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவரது உடல் தற்போது இலங்கையின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை படிக்க இங்கே சொடுக்கவும்.

 6. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழக மீனவர் கொல்லப்பட்டாரா? - இந்தியா, இலங்கையில் இருந்து நேரடி ரிப்போர்ட்

  பிரபுராவ் ஆனந்தன்-இந்தியா, ரஞ்சன் அருண் பிரசாத்-இலங்கை

  மீனவர்கள்
  Image caption: காணாமல் போன தமிழக மீனவர் ராஜ்கிரண்.

  இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு திங்கட்கிழமை இரவு இலங்கை கடல் பகுதியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். மேலும் ஒருவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

  இந்த விவகாரத்தில் காணாமல் போன மீனவர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்திய ஊடகங்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. இத்தகைய சூழலில் அங்குள்ள சமீபத்திய நிலவரத்தை தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் நிருபர்கள் பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் விசாரித்தனர்.

  இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்குமி தமிழக மீனவர்கள் சேவியர், சுகந்தன்
  Image caption: இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்குமி தமிழக மீனவர்கள் சேவியர், சுகந்தன்
 7. இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியது ஒருவர் மாயம்

  பிரபுராவ் ஆனந்தன்

  இந்திய மீனவர்கள்
  Image caption: தமிழக மீனவர்கள் சுகந்தன், சேவியர்

  இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரின் கதி என்ன என்று தெரியவில்லை.

  மீட்கப்பட்ட மீனவர்கள் முதலுதவி செய்யப்பட்ட பிறகு இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

  அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றார்களா அல்லது இலங்கை கடற்படை கப்பல் மோதி இவர்களின் படகு மூழ்கியதில் இந்த சம்பவம் நடந்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

  இதில் ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

  இந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர்களின் படகு திசை மாறி இலங்கை கடலுக்குள் சென்றபோது அவர்களின் கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது.

  இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதாகவும் அவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமில் முதலுதவி செய்த பிறகு அவர்களை தற்போது வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

  கடலில் மூழ்கியவரும் படகை ஓட்டியவருமான ராஜ்கிரனை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்த தகவல் இந்திய தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  மீனவர்கள்
 8. நீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது

  கைப்பற்றப்பட்ட படகுகள் அல்லது கடற்படையினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில், குறித்த மீனவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. நீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது

  ரஞ்ஜன் அருண் பிரசாத், இலங்கையில் இருந்து

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

  வெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இலங்கையில் கோவிட் தொற்றின் 3வது அலை கடந்த ஏப்ரல் மாதம் பரவ ஆரம்பித்திருந்தது.

  இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இறுதியாக கடந்த மார்ச் மாதமே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 10. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  கஞ்சா கடத்தல்

  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு 'நாகை மீனவன்' என்கின்ற யூடியூப் சேனல் நடத்தும் மீனவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9