போர்க் குற்றங்கள்

 1. எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள்: ஐ.நா அறிக்கை

  எத்தியோப்பிய நாட்டின் வடக்குப் பகுதியில் அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரின்போது, அனைத்து தரப்புகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு கூட்டு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

  எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன கூட்டாக நடத்திய விசாரணையின் அறிக்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2020 நவம்பரில் டீக்ரே தனி நாடு கேட்கும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது உத்தரவிட்டபின் இருதரப்பு மோதல் தொடங்கியது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினருக்கும், அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது.

  இந்த வாரம் எத்தியோப்பியாவில் அவசரநிலை அமலாக்கப்பட்டது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது.

  ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி. இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பல இடங்களில், மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணவு இல்லாமல் உதவி செய்து வரும் முகமைகள் தவிக்கின்றன.
  Image caption: பல இடங்களில், மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணவு இல்லாமல் உதவி செய்து வரும் முகமைகள் தவிக்கின்றன.
 2. லேடி ட்ரியூ

  வரலாற்றில் ஒரு சில ஆண்டுகளே வாழ்ந்து மறைந்திருந்தாலும், லேடி ட்ரியூவின் துணிச்சலுக்கு சில வரலாற்றாய்வாளர்கள் புனைக்கதைகளையும் எழுதி அவரது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துள்ளனர். நவீன காலத்தில், ட்ரியூவின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சில விடியோகேம் நிறுவனங்கள் லேடி ட்ரியூ பெயரில் கதாபாத்திரத்தை உருவாக்கி இளம் தலைமுறையிடையே அவரது பெயரை பிரபலப்படுத்தி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 3. தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிருபர்கள் பிபிசிக்கு அளித்த நேர்காணல்

  ஆப்கானிஸ்தான் தாலிபன்
  Image caption: ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்கள்

  கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்கள், பிபிசியுடனான நேர்காணலின்போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தனர்.

  டாக்கி தர்யாபி, நீமத் நக்தி ஆகிய அந்த இரு செய்தியாளர்களும் கடந்த வாரம் காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டத்தைச் செய்தியாக்கியதற்காகவே தங்களை தாலிபன்கள் பிடித்துச் சென்று காவலில் வைத்து தாக்கியதாக தெரிவித்தனர்.

  'Etilaatroz' என்ற புலனாய்வு இதழுக்காக பணிபுரியும் இவர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன.

  தாங்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தாலிபன்கள் பலர் தங்களைக் கட்டைகளாலும் கிடைத்தவற்றைக் கொண்டும் அடித்துப் போட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.

  எந்தவொரு பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாஸும் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தாலிபன் தலைவரை மேற்கோள் காட்டி ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.இது குறித்து மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

 4. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. மாலிக் முடாஸ்ஸிர்

  பிபிசி நியூஸ், காபூல்

  ஆப்கன் தாலிபன்கள்

  தலிபன் போராளிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது - ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கன் போராளிகள் சிலரிடம் நான் பேசினேன். அதிபர் மாளிகைக்குள் நுழைய நாங்கள் முயன்றோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை என்கிறார் பிபிசியின் மாலிக் முடாஸ்ஸிர்.

  மேலும் படிக்க
  next
 6. ஆஃப்கானிஸ்தான் நெருக்கடி: பதவி விலகுவாரா அதிபர்?

  ஆப்கானிஸ்தான்
  Image caption: அஷ்ரஃப் கனி, ஆஃப்கானிஸ்தான் அதிபர்

  ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக மாட்டார் என்பது இன்று அவர் விடுத்துள்ள செய்தியில் இருந்து தெளிவாகிறது என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

  சிதறிக்கிடக்கும் பாதுகாப்பு படையினரை ஒருங்கிணைப்பது, தாலிபன்களுக்கு எதிரான தாக்குதலை தொடருவது என்றவாறு தமது திட்டங்களை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அதிபர் அஷ்ரஃப் கனி தெளிவுபடுத்தியிருப்பதாக சிக்கந்தர் கெர்மானி தெரிவித்தார்.

  எனினும், தற்போது பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றி வருவதைத் தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருவது அரசுக்கு ஒருவித நடுக்கத்தையே ஏற்படுத்தியிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

  அச்சத்தில் பொதுமக்கள்

  தற்போது தலைநகர் காபூலில் தாலிபன்களின் நடவடிக்கைகக்கு ஆதரவாக இல்லாவிட்டால்தான் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

  ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் முன்னேறிய நடவடிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ள அமெரிக்க உளவு அமைப்பு, இதே போக்கில் தாலிபன்கள் முன்னேறி வந்தால், 30 நாட்களில் தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று கணித்துள்ளது. கடைசியாக நேற்று காபூலில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள லோகார் மாகாண தலைநகர் புல் இ ஆலம் என்ற நகரை தாலிபன்கள் கைப்பற்றினார்கள்.

  ஆஃப்கானிஸ்தானின் இரண்டாவது நகரான கந்தஹாரை கைப்பற்றிய பிறகு அந்த நாட்டின் பாதி முக்கிய நகரங்கள் தாலிபன்கள் வசம் வந்துள்ளன. அங்குள்ள நிலைமை கையை மீறிச் செல்வதாகவும் அங்கு மோதல் தொடர்ந்தால், அதற்கு அதிக விலையை கொடுப்பவர்கள் பொதுமக்களாகவே இருப்பர் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.

  மீண்டும் ஷரிய சட்டம்: தாலிபன்கள் உறுதி

  இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தகாத உறவு கொண்டால் கல்லடி தாக்குதல், திருட்டு குற்றத்துக்கு கால்களை முடமாக்குதல், 12 வயதுக்கு பிறகு சிறுமிகள் பள்ளி செல்ல தடை உள்ளிட்ட தமது ஷரிய சட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தாலிபன்களின் முன்கள தளபதிகளும் களத்தில் உள்ள வீரர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

  View more on twitter
 7. Video content

  Video caption: 1857களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட ஜான்சி ராணிக்கு துணை நின்ற விளிம்புநிலை பெண்மணி
 8. இஸ்ரேல் காசா

  பாலத்தீனர்கள் மீதான வான் தாக்குதல் என வந்தபோது, முந்தைய அதிபரின் பாணியை ஜோ பைடன் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. தன்னை நோக்கி வரும் ராக்கெட் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவாகவே பெரும்பாலான அமெரிக்க அதிகாரிகள் இப்போதும் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. காசாவில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த கட்டடத்தை தகர்த்த இஸ்ரேல்.

  பத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எஃப்.பி. செய்தி முகமை பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று (ஏப்ரல் 23) திறந்து வைக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6