கேரளா

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தடுப்பூசி

  தமிழ்நாடு அரசு செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக்கை எடுத்து நடத்த குத்தகை உரிமம் கேட்டும் கிடைக்கவில்லை. அதனை வேறு யாரும் டெண்டரும் எடுக்கவில்லை. கேரள அரசின் முயற்சிக்கு இந்திய அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதா?

  மேலும் படிக்க
  next
 2. பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள் தளர்வு: கேரள அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

  கேரளா

  பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது தொடர்பான வழக்கில் கேரள மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு, "இந்த விவகாரத்தில் கேரள அரசு உடனடியாக பதில் தெரிவிக்க வேண்டும்," என்று கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தது.

  கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அங்கு பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்கு ஏதுவாக மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு கொரோனா கட்டுப்பாடிகளை கடைப்பிடிப்பதில் இருந்து மூன்று நாட்களுக்கு அம்மாநில அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.

  இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கேரள மருத்துவர்கள் சங்கம், இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று எச்சரித்திருந்தது.

  இந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வழக்குடன் தொடர்புடைய விவகாரமாக கேரள மாநில அரசின் நடவடிக்கையை மேற்கெோள்காட்டி பி.கே.டி. நாயர் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் ப்ரீத்தி சிங் என்பவர் முறையிட்டார்.

  இதைத்தொடர்ந்தே, கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கேரளாவில் வரும் புதன்கிழமை (ஜூலை 21) பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில், அதை கொண்டாடும் விதமாக மக்கள் பல வகை கடைகள், அங்காடிகளுக்கு சென்று பொருட்களை வாங்க ஏதுவாக, ஜூலை 18,19,20 ஆகிய தேதிகளில் காலை 7 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

 3. Video content

  Video caption: ஜிகா வைரஸ்: அறிகுறிகள், பாதிப்புகள் என்ன? தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை

  ஜிகா வைரஸ்: அறிகுறிகள், பாதிப்புகள் என்ன? தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை

 4. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  ஏடிஸ் வகை கொசு.

  கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. கேரளாவில் 'தடுப்பு மருந்து இல்லாத' ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

  கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - ஆயுர்வேத மருத்துவ மாணவிக்கு என்ன நடந்தது?

  கேரளத்தை உலுக்கும் வரதட்சணை கொடுமை வழக்கு - ஆயுர்வேத மருத்துவ மாணவிக்கு என்ன நடந்தது?

 7. இம்ரான் குரேஷி

  பிபிசி தமிழுக்காக

  விஸ்மயா

  கேரளாவில் விஸ்மயாவின் இறப்பு பல எச்சரிக்கை மணிகளை எழுப்பியுள்ளது. விஸ்மயா இறப்பை தொடர்ந்து ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அரசாங்கம் தெரிவித்த முதல் நாளில் 117 புகார்கள் பதிவாகின. இரண்டாம் நாளில் 154 புகார்கள் பதிவாகியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. இம்ரான் குரேஷி

  பிபிசிக்காக

  சித்தரிப்புப் படம்

  ஒரே அறையில் பத்து வருடங்களாக அடைப்பட்டு கிடந்து ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தார் என்றால் சற்று விசித்திரமாகதான் இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 9. இம்ரான் குரேஷி

  பிபிசி ஹிந்திக்காக

  கேரள மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன்

  காவல் துறை விசாரணையில் புதிய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில புதிய விஷயங்கள் வெளிவருகின்றன. இது பாஜக-வுக்குள்ளேயே கூட ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. नर्स

  மருத்துவமனையின் நர்சிங் கண்காணிப்பாளர் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்த உத்தரவு இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, சுற்றிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 19