மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா

 1. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி: காங்கிரஸ்

  CONGRESS

  மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசிய நிலையில், அம்மாநிலத்தில் புதிய அரசியல் முன்னேற்றமாக காங்கிரஸ் கட்சி, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அதன் மாநில தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.

  கட்சி மேலிடம் விரும்பினால், முதல்வர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

  சில தினங்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அரசியல் உத்திகள் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாயின.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு முறை எம்எல்ஏ ஆக இருப்பவர் நானா படோல். அங்குள்ள பாந்த்ரா மாவட்டத்தின் கசோலி தொகுதியில் இருந்து அவர் தேர்வானார்.

  மாநில அரசியலில் காங்கிரஸின் முகமாக அறியப்படும் இவர் வெளியிட்டுள்ள கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. இங்கு ஆளும் அரசின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டுவரை உள்ளது.

  View more on twitter
 2. மயாங் பகவத்

  பிபிசி மராத்தி

  கொரோனா வைரஸ் தடுப்பூசி

  கொரோனா குறித்து மக்களுக்கு இப்போது நிறைய தவறான கருத்துகள் உள்ளன. இதில் முக்கியமான என்னவென்றால், கொரோனா போய்விட்டது என்பதே.

  மேலும் படிக்க
  next
 3. திவ்யா ஆர்யா

  பிபிசி செய்தியாளர்

  அர்னாப்

  அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரின் மனுக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவசர வழக்காக அவற்றை விசாரிக்க பட்டியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் அவரது மனு பல மணி நேரம் விசாரிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. கங்கனா

  சில இடங்களில் மாநில அரசுகளே அவற்றின் ஆயுதப்படையினர் அல்லது கமாண்டோ படை வீரர்கள் மூலம் மத்திய அரசு வழங்கும் இசட் பிளஸ் அல்லது இசட் பிரிவுக்கு நிகரான பாதுகாப்பை மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும். தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இப்படிப்பட்ட பாதுகாப்புதான் மாநில காவல்துறையால் வழங்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. தாக்கரே

  சிவ சேனையை விட்டு பிரிந்து சென்று நவநிர்மான் சேனை தொடங்கியுள்ள ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்தால் பாஜகவின் ஆதரவு கிடைக்கலாம் என்கிறார் பத்திரிகையாளர் தவல் குல்கர்னி.

  மேலும் படிக்க
  next
 6. மகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது

  288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க அணிக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அஜித் பவாருக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதில் தெளிவில்லை.

  மேலும் படிக்க
  next