புனே

 1. லேசான நம்பிக்கை தரும் புனேவின் புள்ளி விவரங்கள்

  ராகுல் கெய்க்வாட், பிபிசி மராத்திக்காக, புனேவிலிருந்து

  லேசான நம்பிக்கை தரும் புனேவின் புள்ளி விவரங்கள்

  மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக புனே இருக்கிறது.

  மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கையை பெறுவதற்கான போராட்டம் போன்ற சில மோசமான நாட்களை இந்த நகரம் கண்டது.

  ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நிலைமை மேம்பட்டு வருகிறது.

  குணமடைபவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்தப் போக்கு ஒரு வாரமாக தொடர்கிறது. தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 54,000 லிருந்து 47,000 ஆக குறைந்துள்ளது

  ஏப்ரல் 19 ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி, புனேயில் 4587 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, 6473 நோயாளிகள் குணமடைந்தனர்.

  ஏப்ரல் 26 ஆம் தேதி நகரத்தில் 2538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், அதேநேரம், 4351 நோயாளிகள் நலமடைந்தனர்.

  புனேயில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  எனவே குறைந்த எண்ணிக்கையிலான மக்களே இப்போது மருத்துவமனையில் அனுமதி பெறச் செல்கின்றனர்.

  ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளைப் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது.

  மண்டல ஆணையரின் ஏப்ரல் 27 தரவுகளின்படி, 227 ஆக்சிஜன் படுக்கைகளும், 1158 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும் காலியாக உள்ளன.

  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோவிட் பராமரிப்பு மையங்களை திறந்துள்ள காரணத்தால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இந்த தொற்று நோய் காலகட்டத்தில் ரெம்டிசிவிர் ஊசிமருந்து விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளது. புனேவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மருந்துக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

  சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதற்கான ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டது.

  சீரான விநியோகத்திற்காக ஒரு நோடல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பிரச்சனை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

 2. கீர்த்தி தூபே

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா

  மதியம் ஒரு மணிதான் ஆகிறது. அதற்குள்ளாக 22 உடல்களை எரியூட்டி விட்டோம். ஒரு நாளைக்கு 50 முதல் 60 உடல்களை எரிக்கிறோம். அடுத்த உடலை எரிப்பதற்கு இடையில் கிடைக்கும் சிறிது நேரத்தில்தான் மதிய உணவு சாப்பிட வேண்டும். ஆறு குளிர்விக்கும் பெட்டிகள் இருக்கின்றன. ஆனால் வரும் உடல்கள் ஏராளம்.

  மேலும் படிக்க
  next
 3. ஜேம்ஸ் கலேகர்

  அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர்

  கொரோனா

  ஆக்ஸ்ஃபோர்ட் வைரஸ் தடுப்பூசியை குளிரூட்டி சாதன வெப்பநிலையில் கூட வைக்கலாம். அதாவது இந்த மருந்தை, உலகின் எந்த பகுதிக்கும் விநியோகிக்கலாம். ஃபைசர், பயோஎன்டெக் மற்றும் மாடர்னா மருந்துகள் போல அதிக குளிர்ச்சியான இடங்களில் அதை வைக்க வேண்டிய அவசியமில்லை.

  மேலும் படிக்க
  next