பௌத்தம்

 1. குஷி நகர விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

  View more on twitter

  உத்தர பிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்

  "குஷிநகர் சர்வதேச விமான நிலையம் உலகெங்கிலும் உள்ள செளத்த சமுதாயத்தின் பக்திக்கு அர்ப்பணம். இந்த இணைப்பின் மூலம் புத்தர் தொடர்புடைய இடங்களின் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது," என்று விமான நிலைய திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோதி தெரிவித்தார்.

  இந்திய விமான சேவை திட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் 900க்கும் மேற்பட்ட புதிய பாதைகளில் விமான சேவை வழங்க அரசு அனுமதித்துள்ளது. இதில் 350 வழித்தடங்கள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. 50க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் அல்லது முன்பு சேவையில் இல்லாதவை செயல்படத் தொடங்கியுள்ளன.

  உத்தர பிரதேசத்தில், குஷிநகர் விமான நிலையத்திற்கு முன்பு 8 விமான நிலையங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

  லக்னெள, வாரணாசி மற்றும் குஷிநகருக்குப் பிறகு ஜெவார் சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அது தவிர, அயோத்தி, அலிகார், அசம்கர், சித்ரகூட், மொரதாபாத் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய இடங்களில் விமான நிலையத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன.

  குஷி நகரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் மற்றும் இலங்கை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ ஆகியோருடன் வந்த இலங்கை விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  View more on twitter
  View more on twitter
 2. பூடான்மகிழ்ச்சி

  ஏதோவொரு காலத்தில் எதேச்சையாக கண்டறியப்பட்ட தொல்லியல் தடங்கள் அல்லது கண்டுபிடிப்புகள், கட்டுமானப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட அகழ்வுப் பொருட்கள் மூலமே பூடானிய வரலாறுக்கு அவ்வப்போது சில கண்டுபிடிப்பாளர்கள் உயிர் கொடுத்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்

  யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார்

 4. பத்தேகம சமித தேரர்

  தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கள் தொடர்பில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு வந்த இவர், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. Modi, Rajapaksa meet

  இந்தக் கூட்டத்தின்போது பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இந்தியா இலங்கைக்கு ஒதுக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. கோட்டாபய

  பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சமயங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. புத்தர் சிலை (சித்தரிப்புப் படம்)

  பௌத்த விகாரை உடைக்கப்பட்டு, திருகோணேஸ்வரம் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என தொல்லியல் பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியருமான பீ.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 8. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த ஆலயமும் சுற்றுச் சூழலும்

  இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 9. ரஞ்ஜன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழ்

  gotabaya

  கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌர்த்தர்களாக காணப்படுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை நிலவரம் என்ன?

  ரஞ்சன் அருண் பிரசாத், பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து

  இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக இதுவரை 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆவர்.

  அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 573 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  215 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  இந்த நிலையில், இலங்கையில் இதுவரை 30,525 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  இதேவேளை, பௌத்தர்களுக்கு இன்று விசேட வெசாக் தினமாகும். எனினும், நாடு முழுவதும் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமையினால் அனைத்து பௌத்தர்களும் தமது வீடுகளில் இருந்தவாறே இன்று வெசாக் பூரணை தினத்தை கொண்டாடுகின்றனர்.

  பௌத்தர்களுக்கு இன்று விசேட வெசாக் தினமாகும்
பக்கம் 1 இல் 2