புட்டின்

 1. ரஷ்ய அமைச்சர் யெவ்கேனீ பலி - தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபம்

  ரஷ்ய அமைச்சர்
  Image caption: யெவ்கேனீ ஸீனிட்செஃப்

  ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

  ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமார் ஆறாயிரம் பேர் ஈடுபட்டனர்.

  இத்தனை பேருடன் அசாதாரணமான ஓர் பயிற்சி இதற்கு முன்பு அங்கு நடந்ததில்லை.

  ரஷ்ய தொலைக்காட்சியான ஆர்டியின் தலைமை அதிகாரி மார்கரிடா சைமோன்யானின் தகவலின்படி, செங்குத்தான பாறை மீது பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் யெவ்கேனீ ஸீனிட்செஃப். அவருடன் இயக்குநர் அலெக்சாண்டர் மெல்னிக் இருந்தார்.

  அப்போது கால் வழுங்கியதில் மார்கரிட்டா சைமோன்யான் பின்னால் இருந்த தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முற்பட்ட முயற்சியில் யெவ்கேனியும் உயிரிழந்தார். அவருக்கு முன்பாகவே சைமோன்யானும் இறந்தார்.

  ரஷ்யாவில் அதிபர் விளாதிமீர் புதின் அமைச்சரவையில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் யெவ்கேனீ. ரஷ்ய அவசரகாலத்துறை அமைச்சராக அவர் 2018 முதல் இருந்தார் அவர்.

  ரஷ்ய அதிபரின் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனிக்கும் அதிகாரிகளில் யெவ்கேனியும் ஒருவர். தமது பணிக்காலத்தின் பெரும்பகுதியை அவர் தேச பாதுகாப்பு பணியிலேயே கழித்திருந்தார்.

  சோவியத் கேஜிபி என்ற ரஷ்ய உளவுத்துறையில் பணியைத் தொடங்கிய அவர், படிப்படியாக அந்த துறையின் இரண்டாம் நிலைவரை உயர்ந்தார்.

  அதிபர் புதினுடன் யெவ்கேனீ நீண்ட காலம் பணியாற்றியவர் அவரது மரணம், மிகப்பெரிய இழப்பு என்று ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் கூறியுள்ளார்.

  திரைப்பட இயக்குநர் மெல்னிக் ஒரு எழுத்தாளரும் கூட. ஆர்டிக் ஆவணப்படம் ஒன்றை எடுத்ததன் மூலம் 2015இல் அவர் பிரபலம் அடைந்தார்.

  ஆர்டிக் பிராந்தியத்திலும் ரஷ்யாவின் வடக்கு கடல் பகுதியிலும் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆவணப்படம் எடுக்கும் நோக்குடன் அவர் இங்கு வந்திருந்தார்.

  கிராஸ்நோயார்ஸ் பிராந்தியத்தில் சம்பவம் நடந்த வேளையில் ஊடகக் குழுவினர் மக்கள் பயிற்சி செய்யும் காணொளியை பதிவு செய்திருந்தனர்.

 2. FM Nirmala Sitharaman after launching National Monetisation Pipeline in Delhi

  அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின், அந்தச் சொத்துகள் மீண்டும் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 3. Putin and Biden

  வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை முடக்கி வைத்துக்கொண்டு அவற்றை, மீண்டும் நிறுவனத்தின் வசம் விடுவதற்காக இணைய வழித் தாக்குதலாளிகள் பணயத் தொகை கேட்கும் ரான்சம்வேர் தாக்குதல்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 4. அலெக்ஸே நவால்னி

  அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய ரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்

  மேலும் படிக்க
  next
 5. அலெக்ஸே நவால்னி

  எப்போது வேண்டுமானாலும் அலெக்ஸே நவால்னிக்கு இருதய செயலிழப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம் என அவரது சமீபத்திய ரத்த பரிசோதனை முடிவுகள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

  மேலும் படிக்க
  next
 6. சாரா ரெய்ன்ஸ்ஃபோர்டு

  பிபிசி நியூஸ், ரஷ்யா

  A staff member at the entrance to a temporary Covid-19 vaccination site in the Gagarinsky shopping and leisure centre

  ஆறு மாத காலத்தில் ரஷ்யாவில் சிறார் வயதை கடந்த 60 சதவிகிதம் பேருக்கு ஸ்புட்னிக்-V தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. அலெக்ஸே நவால்னி

  44 வயதாகும் நவால்னி இதை இட்டுக்கட்டப்பட்ட வழக்கு என்று வாதிடுகிறார். மேலும், தனக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவின் பேரிலேயே விஷம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் நேரடி குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 8. போராட்டம்

  அலெக்ஸே நவால்னி மீது கையாடல் வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது.

  மேலும் படிக்க
  next
 9. ரீத்து பிரசாத்

  பிபிசி நியூஸ்

  'ஜனநாயகத்தை சோதித்த அதிபர்'

  டொனால்டு டிரம்பின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. சரி. ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றை படைத்த டிரம்ப் விட்டுச் சென்ற மரபு என்ன? இதனை சில அமெரிக்க வரலாற்றாய்வாளர்களிடம் கேட்டோம்.

  மேலும் படிக்க
  next
 10. அலெக்ஸே நவால்னி

  "நவால்னி மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, தங்கள் குரலை அரசு கேட்க வேண்டுமென விரும்பும் ரஷ்யர்களை அவமானப்படுத்தும் செயல்" என ஜோ பைடனின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3