நீதித்துறை

 1. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தலித் படுகொலைகள்

  தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 300 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எவிடென்ஸ் அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்தக் கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

  மேலும் படிக்க
  next
 3. கீதா பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  Chief Justice of India Ramana with female judges

  இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கையை வரலாற்றுத்தருணம் என்று வழக்கறிஞர்கள் சிலர் அழைக்கின்றனர். இது எந்த அளவுக்கு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று?

  மேலும் படிக்க
  next
 4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு: "கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தலாமா?" - ஸ்டெர்லைட் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  `கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?' என்ற கேள்விகளும் எழுந்தன.

  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அளித்த அறிக்கையின் வழக்கை முடித்து வைத்து உத்தரவு வெளியானது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை மையமாகக்கொண்டு செயல்படும் `மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இதில், `தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி,

  நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `சீலிடப்பட்ட அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்' எனக் கூறியுள்ளது. `சீலிடப்பட்ட அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தார்.

  இதன்பிறகு மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இந்த அறிக்கையின் நகலை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கும் வழங்குமாறு உத்தரவிட்டனர்.

  தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்குக்கூடுதல் இழப்பீடு வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைக் கைவிடவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

  பின்னர், `துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ` கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் இந்தளவு ஆதிக்கம் செலுத்தக் கூடாது எனவும் அவர்களுக்காக இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை மக்கள் மீது நடத்தக் கூடாது, இப்படியொரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது' எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், `இந்த அறிக்கையை பொதுவெளியில் வைக்கக் கூடாது' எனவும் அறிவுறுத்தினர்.

  முடிவில், `துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு விசாரணை பிரிவின் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 5. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?

  பெண்கள் நீண்ட காலமாக இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் கோரி வந்தனர். இருப்பினும், இது ராணுவம் மற்றும் அரசாங்க மட்டத்தில் எதிர்க்கப்பட்டு வந்தது. திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களும் ஆண்களின் எதிர்ப்பும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 6. Vietnam: Man gets five years in jail for spreading Covid

  லீ வான் த்ரி எனும் அந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. அந்த எட்டுப் பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 8. உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதி

  இந்திய உச்ச நீதிமன்றம்

  உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள இடங்களில் நியமிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

  வழக்கமாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கோலேஜ்ஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக்குழுவே இறுதி செய்யும்.

  ஆனால், சம்பிரதாய வழக்கத்தின்படி அந்த தேர்வுக்குழு இறுதி செய்யும் பெயர்கள் சட்டத்துறை மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பட்டியலில் இடம்பெறும் நீதிபதிகள் அல்லது மூத்த வழக்கறிஞர்கள் தொடர்பாக உளவுத்துறை விசாரணை, நன்னடத்தை சரிபார்ப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் அந்த பட்டியல் சில நேரங்களில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும்.

  பிரச்னை உள்ளதாக கருதப்படும் பெயர்கள், மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்ற குறிப்புடன் மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்பி வைக்கப்படும்.

  இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேரையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிபதிகளின் விவரம்:

  பெண் நீதிபதிகள்

  1) ஹிமா கோஹ்லி, தெலங்கானா உயர் நீதி்மன்ற தலைமை நீதிபதி

  2) பி.வி. நாகரத்னா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி

  3) பீலா திரிவேதி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி.

  வழக்கறிஞர் பணியில் இருந்து தேர்வானவர்

  4) பி.எஸ். நரசிம்மா, மூத்த வழக்கறிஞர்

  பிற மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள்

  5) ஏ.எஸ். ஓகா, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

  6) விக்ரம் நாத், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

  7) ஜே.கே. மகேஸ்வரி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

  8) சி.டி. ரவிகுமார், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி

  9) எம்எம். சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

  இந்த பட்டியலில் உள்ள நீதிபதிகளின் வயது, பணி மூப்பு அடிப்படையில் பார்த்தால், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா, மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மராவ் ஆகியோர் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்பிருக்கிறது.

  இதில் நீதிபதி நாகரத்னாவுக்கு 2027இல் தலைமை நீதிபதியாகவும் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

  தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதும் இவர்களுக்கான பணி ஆணை வெளியிடப்படும்.

  அதன் மூலம், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 24இல் இருந்து 33 ஆக உயரும்.

  உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 34.

  இன்றைய நிலவரப்படி 10 நீதிபதி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்போது ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணை வெளியான பிறகும் ஒரு நீதிபதி பணியிடம் காலியாக இருக்கும்.

 9. ஆளும் கட்சிக்கு சில காவல் அதிகாரிகள் ஒத்து ஊதுவது சங்கடமான போக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

  குர்ஜிந்தர் பால் சிங்
  Image caption: குர்ஜிந்தர் பால் சிங், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி

  ஆளும் கட்சியின் நன்மதிப்பில் இருக்க விரும்பும் சில அதிகாரிகள், தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்கட்சியினருக்கு தொந்தரவு கொடுப்பது சங்கடமான போக்கு என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

  இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1994ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில பிரிவு அதிகாரி குர்ஜிந்தர் பால் சிங். கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வந்த நிலையில் இவர் அம்மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

  அந்த மாநிலத்தில் முந்தைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக தான் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தேச துரோக செயலில் ஈடுபட்டதாகவும் சில குற்றச்சாட்டுகளை சுமத்தி தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தான் பணியில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  தனக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

  இவரது மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது.

  அப்போது குர்ஜிந்தர் பால் சிங் தரப்பு வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, அவர் மீதான வழக்கில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

  அதே சமயம், மனுவில் காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, "ஆளும் கட்சிக்கு ஒத்து ஊதும் சில காவல்துறை அதிகாரிகளின் சங்கடமான போக்கு வளர்ந்து வருகிறது,அத்தகைய போக்குக்கு காவல்துறை அதிகாரிகளே பொறுப்புடைமையாக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

  மேலும், ஆளும் கட்சியின் நன்மதிப்பில் இருக்க விரும்பும் சில அதிகாரிகள், தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கான விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

 10. தொடர்ந்து வாய்தா: ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

  ராஜேந்திர பாலாஜி
  Image caption: ராஜேந்திரபாலாஜி, தமிழக முன்னாள் அமைச்சர்

  தன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது 7 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

  அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சத்தியநாராயணன் - ஹேமலதா அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். சத்தியநாராயணன் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் நீதிபதி ஹேமலதா, காலம் கடந்து வழக்குப் பதிவுசெய்வதால் பயனிருக்காது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

  இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அதன்படி அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.

  அதற்கு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் பிழைகள் கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து மனுதாரர் வாய்தா கேட்டுவருவதாகவும் கூறினார்.

  இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்பு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இனி இந்த வழக்கில் வாய்தா கேட்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வழக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பக்கம் 1 இல் 15