சோனியா காந்தி

 1. காஷ்மீர் காங்கிரஸுக்கு நெருக்கடி: 20 தலைவர்கள் கூண்டோடு பதவி விலகல்

  காங்கிரஸ்
  Image caption: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 முன்னாள் அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் உட்பட 20 காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து பதவி விலகியுள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து கருத்து தெரிவிக்க கட்சி அவகாசம் அளிக்கவில்லை என்று கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கூட்டாக அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் இந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

  ராஜிநாமா செய்த தலைவர்கள் முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

  தலைவர்கள் ராஜிநாமா செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

  தலைவர்களின் பெயர்கள் இன்னும் தெரியவில்லை. சோனியா காந்தி மட்டுமின்றி ராகுல் காந்தி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸின் செயலாளர் ரஜினி பாட்டீலுக்கும் இந்த தலைவர்கள் பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளதாக மாநில காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

  கட்சித் தலைமையின் "விரோத மனப்பான்மை" காரணமாக, கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்தத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மாநில பிரச்னைகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும், ஆனால் நேரம் கொடுக்கவில்லை என்றும் அவர் எழுதினார்.

  இருப்பினும், ஆதாரங்களின்படி, முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட சில தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் இந்தத் தலைவர்களிடம் இருந்து விலகி உள்ளனர்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் இங்கு தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படுகிறது.

  இத்தகைய சூழ்நிலையில் காங்கிரசை விட்டு 20 தலைவர்கள் ஒன்றாக வெளியேறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 2. கபில் சிபல்

  காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டின் மீது தாக்குதலைக் கண்டு செய்வதறியாது தவித்ததாக ப.சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார், காங்கிரஸ் அமைப்பில் சீர் திருத்தம் தேவை என்று கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 'ஜி23' குழு என்று அறியப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. வாத்சல்ய ராய்

  பிபிசி செய்தியாளர்

  கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி

  "உங்கள் எதிரியைத் தேர்ந்தெடுங்கள், நண்பர்கள் தானாகவே உருவாகிவிடுவார்கள். நாங்கள் நாட்டின் மிகப் ஜனநாயகக் கட்சியில் சேர விரும்புகிறோம், ஏனென்றால் காங்கிரஸ் காப்பாற்றப்படாவிட்டால் தேசம் காப்பாற்றப்படாது." என்று கூறியிருக்கிறார் கன்னையா குமார்

  மேலும் படிக்க
  next
 4. அரவிந்த் சாப்ரா

  பிபிசி செய்தியாளர்

  அமரீந்தர்

  "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்.

  மேலும் படிக்க
  next
 5. அமரிந்தர் சிங் பதவி விலகல்: காங்கிரசில் என்ன நடக்கிறது?

  நவ்ஜோத் சித்து
  Image caption: நவ்ஜோத் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்

  பஞ்சாப் மாநில அரசியலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதலின் உச்சமாக இன்று முதல்வர் பதவியை கேப்டன் அமரிந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

  அந்த கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சேர்ந்த நான்கரை ஆண்டுகளில் ஆளும் முதல்வரையே பதவியில் இருந்து விலக வைத்திருக்கிறது சித்துவின் சாதுர்யமான அரசியல் ஆட்டம் என்கிறார்களஅ ஆய்வாளர்கள். இது தொடர்பான சுவாரஸ்யமான பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.

 6. பஞ்சாப் அரசியல்

  பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கசப்புணர்வு நிலவி வருகிறது. 2019இல் நடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை சித்துவே வழிநடத்தினார். அப்போதே முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு முக்கியத்துவம் குறைந்ததாக கூறப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு முதல்வரின் செயல்பாடுகளை நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக விமர்சித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த நூல் என்ன தெரியுமா?

  ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நாகரிகத்தின் பயணம் - சிந்து முதல் வைகை வரை (Journey of Civilisation - Indus to Vaigai) என்ற நூலை தனது சந்திப்பின்போது சோனியா காந்திக்கு பரிசளித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்திய ஆட்சிப் பணி அலுவலராக ஒரிசாவில் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் பாலகிருஷ்ணன், தமது தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெயர் பெற்றவர்.

  சோனியாவுக்கு புத்தகம் பரிசளித்த மு.க.ஸ்டாலின்
 8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  எம்ஜிஆர்

  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்த இந்திரா காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி, அடுத்ததாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோற்றது ஏன்? எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? வரலாற்றில் பதிவான அந்தக்கால அரசியல் நிகழ்வுகளை உங்கள் கண் முன் பதிவு செய்கிறது பிபிசி தமிழின் இந்த தேர்தல் சிறப்புக்கட்டுரை.

  மேலும் படிக்க
  next
 9. ரெஹான் ஃபஸல்,

  பிபிசி நிருபர்

  வாஜ்பாயி

  "அமெரிக்காவில் கூட புதிய அதிபர் பதவியேற்றால், அவருக்கு 100 நாள் சலுகை காலம் வழங்கப்படுகிறது. ஓரிரண்டு மாதங்கள், புதிய அரசு குறித்த ஒருவித மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். மக்களும் அதிகம் அரசு செயல்பாட்டை விமரி்ப்பதில்லை. இந்த நிலை வாஜ்பேயிக்கு கை கூடவே இல்லை."

  மேலும் படிக்க
  next
 10. சோனியா.

  தேசியம், தேசபக்தி ஆகியவை குறித்து மற்றவர்களுக்கு சான்றிதழ் தருகிறவர்கள் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்று குறிப்பிட்டார் சோனியா.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5