உம்பான் புயல்

 1. சலீம் ரிஸ்வி

  பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

  அமெரிக்க சூறாவளி ஐடா

  நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸில், பல கட்டடங்களின் அடித்தளங்களில் வெள்ள நீர் புகுந்தது. நியூயார்க்கின் குயின்ஸ் பெருநகரத் தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு மாகாண மற்றும் மத்திய அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களை புரட்டியெடுக்கும் சூறாவளி தாக்கம்
 3. யாஸ் புயல்: மூன்று மாநில முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை

  ஒடிஷா
  Image caption: பாரதீப் துறைமுகம், ஒடிஷா
  Odisha

  வங்க கடலில் இன்று உருவாகும் யாஸ் புயல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ஒடிஷா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் முதல்வர்களுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

  இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

  வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமாகி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கூறியுள்ளது.

  இந்த புயல் வரும் 26ஆம் தேதி மணிக்கு மேற்கு வங்கம், ஒடிஷா இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  புயல் கரையை கடக்கும்போது 155 கி.மீ முதல் 165 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

  ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பேரிடர் அதிவிரைவு மீட்புப்படையைச் சேர்ந்த 60 அணிகள் தயார்நிலையில் உள்ளன.

  Odisha
 4. மோதி

  குஜராத்தில் கரையை கடந்த தெள தே புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை வான் வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்து வருகிறார். டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோதி, குஜராத்தின் பாவ்நகரில் தரையிறங்கிய பிறகு, உனா, டியு, ஜாஃப்ராபாத், மஹுவா ஆகிய பகுதிகளில் வான் வழியாக ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையே, புயல் சீற்றத்தின்போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட கப்பலில் இருந்த 89 பேரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. தெள தே புயல்: 184 ஓஎன்ஜிசி ஊழியர்களுடன் கரைக்கு திரும்பிய கடற்படை கப்பல்கள், புயல் தாக்கத்தை வான் வழியாக ஆய்வு செய்யும் பிரதமர்

  தெள தே புயல் இந்திய கடற்படை
  India navy

  தெள தே புயலின்போது மூழ்கிய பி305 கப்பலில் இருந்த 89 ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

  அந்த கப்பலில் பயணம் செய்த 273 பேரில் 184 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியபோது அந்த கப்பல் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

  அது பின்னர் மும்பை அருகே மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த வகை பார்ஜ் கப்பல்கள் பயன்படுத்தப்படும். புயல் காரணமாக அதன் நங்கூரம் வலுவிழந்து நீங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர், பி305 கப்பலில் இருந்தவர்களில் 184 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கடற்படை கப்பல்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளன என்று கூறினார்.

  மீட்புப் பணிகளில் ஐஎன்எஸ் தேக், ஐஎன்எஸ் பெட்வா, ஐஎன்எஸ் பீஸ், பி8ஐ ரக சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், குஜராத் புயல் தாக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வான் வழியாக பார்வையிட்டு வருகிறார். குஜராத் மற்றும் டியுவிலும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

  இதேவேளை, எஸ்எஸ்-3 பார்ஜ் என்ற கப்பலிலும் சாகர் பூஷண் எண்ணெய் வலய பகுதியிலும் பணியில் இருந்த சுமார் 297 ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கடற்படைக்கு தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணியில் ஐஎன்எஸ் தல்வார் தயாராக உள்ளது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

  கடற்படை இந்திய பிரதமர் மோதி
  INDIA navy
 6. புரெவி புயல்

  வியாழக்கிழமை புயல் நகர்ந்து வரும்போது சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  புயல்

  2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து அரசாங்கம் பாடம் கற்கவில்லை என்று தோன்றுகிறது. சுனாமியில் பாதிக்கப்பட்டதை கூட மக்கள் மறந்துபோகும் அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு பேரிடரை இவர்கள் சந்திக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: முடிச்சூர் வெள்ளக்காடாய் மாறுவது ஏன்? என்னதான் பிரச்சனை?

  முடிச்சூர் வெள்ளக்காடாய் மாறுவது ஏன்? என்னதான் பிரச்சனை?

 9. நிவர் புயல்

  புதுச்சேரியில் தீர்வு காணப்படாத தண்ணீர் வடிகால் பிரச்னையால் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகுவதாக பிபிசியிடம் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 10. புதுச்சேரி

  இன்றைய நாளில் பதிவான களத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3