ஏங்கெலா மெர்கல்

 1. வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மன் தலைவர்

  ஜெர்மன் பிரதமர்

  ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கல் இருவேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

  முதலாவதாக ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், இரண்டாவதாக மாடனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

  66 வயதான ஏங்கெலா மெர்கல் சில நாள்களுக்கு முன்பு மாடனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாக அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மெர்கலுக்கு ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசி போடப்பட்டது.

  ஒருவர் வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறினாலும், அதை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

  கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மெர்கல் இந்த ஆண்டு பதவி விலக இருக்கிறார்.

  ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் அந்தத் தடுப்பூசிக்கு ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்தன.

  ஒரு நபருக்கு இருவேறு தடுப்பூசிகளைப் போடுவது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இருவேறு தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான பக்கவிளைவுகள் வரும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 2. கொரோனா

  "இந்தத் திரிபால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. அதில், அவர் டெல்டா பிளஸ் திரிபால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் முழுமையாகக் குணமடைந்து விட்டார்" என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  Follow
  next
 3. டிரம்ப்

  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி உறுதியானதையடுத்து, ஜோ பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. நவால்னி

  நவால்னிக்கு நச்சு ரசாயனம் கொடுத்தது யார் என்பதை அறிய ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தம் தர வேண்டும் என்று ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கலுக்கு அவரது நாட்டில் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா வைரசின் முதல் கட்டத்தை கடந்துவிட்டதாக ஜெர்மனி அறிவிப்பு

  கொரோனா வைரசின் முதல் கட்டத்தை கடந்துவிட்டதாக ஜெர்மனி அறிவிப்பு

  கொரோனா வைரஸ் தொற்று பரவலின் முதல் கட்டத்தை கடந்துவிட்டதாக ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

  எனினும் இன்னும் நீண்ட தூரம் கடக்க வேண்டியிருக்கிறது என்றும் மெர்கல் குறிப்பிட்டுள்ளார்.

  ஜெர்மனியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சமூக விலகல் கட்டுப்பாடுகள் ஜுன் 5ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த தரவுகளை கணக்கிடும் ராபர்ட் கோச் நிறுவனத்தின் சமீபத்திய தரவுகள் சற்று மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

  ஆனால், கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 6. பெண்கள் ஆளும் நாடுகளில் கொரோனா தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதா?

  பெண்கள் அரசியலில் இருப்பதனால் இந்த வைரஸ் தொற்று குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை யோசிக்க வைத்தது. நேரடியாக குழந்தைகளின் நலன் மேல் அக்கறை எடுத்து கொள்வதன் மூலம், இத்தொற்றால் எப்படி அனைத்து வயதை சேர்ந்தவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பது தெரிய வருகிறது

  மேலும் படிக்க
  next