ஜெர்மனி

 1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலை தகவல்களை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 2. Video content

  Video caption: ஆரியர்களைத் தேடி சென்னை வரை வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்

  யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார்

 3. ஹிட்லர்

  இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

  மேலும் படிக்க
  next
 4. பசு

  'மூலூ' செயற்கை புல் தரைக்கு வெளியே சிறுநீர் கழித்தால் பிறகு அந்த பசுக்கள் மீது மூன்று நொடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. சரியான இடத்தில் சிறுநீர் கழித்தால் அதற்கு பிடித்தமான பொருட்கள் சாப்பிட தரப்படுகிறது. மூன்று கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. ஆப்கானிஸ்தான் தாலிபன்

  விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

  Follow
  next
 6. பருவநிலை

  தற்போதைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மனித சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே ஐரோப்பிய பேய் மழை உணர்த்துகிறது

  மேலும் படிக்க
  next
 7. காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: ஒரு ஆப்கன் வீரர் பலி

  ஆப்கானிஸ்தான்

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படையினர், ஆப்கன் படைகள் மற்றும் ஆயுததாரிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ஆப்கன் வீரர் இறந்துள்ளதாக ஜெர்மன் ராணுவம் தெரிவித்துள்ளது.

  விமான நிலையத்தின் வடக்குப் பகுதியில் நடந்த சண்டையில் ஒரு வீரர் பலியானார், மூன்று பேர் காயம் அடைந்தனர் என்று ஜெர்மன் ராணுவம் அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

  காபூல் விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்கள் தங்களுடைய போராளிகளை நிறுத்தியிருக்கிறார்கள்.

  இதேவேளை காபூல் விமான நிலைய வளாகம் மற்றும் அதற்கு உள்ளே அமெரிக்கா தலைமையிலான படையினருக்கு உதவியாக ஆப்கன் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  அங்கு தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் விமான நிலைய வாயில் மூடப்பட்டுள்ளதாகவும் நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 8. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது ஜெர்மனி

  ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தமது தரப்பில் வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான உதவிகளை ஜெர்மனி அரசு நிறுத்தியுள்ளது.

  இது தொடர்பாக அந்நாட்டின் வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெர்க் முல்லர் ஊடகங்களிடம் பேசுகையில், "ஜெர்மனியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஜெர்மன் அரசு வளர்ச்சித்துறை அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டனர்," என்று கூறினார்.

  "ஜிஎஎஸ் அமைப்பில் பணியாற்றி வரும் உள்ளூர் நபர்கள் தாயகத்தை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களை ஆப்கனில் இருந்து வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

  ஜெர்மன் ஊடக செய்திகளின்படி, ஆப்கானிஸ்தானுக்கு அதிக உதவிகளை வழங்கி வந்த நாடுகளில் ஜெர்மனி முதன்மையானதாக இருந்துள்ளது.

 9. Vaccination graphic

  பல்லாயிரம் நோயாளிகளுக்கு தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. பாவ்லின்

  ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் பிகினி கட் எனப்படும் இடுப்புக்கீழே உள்ள பகுதி தெரியும்படியான ஆடைகளை அணிவது வழக்கம். ஜெர்மனி வீராங்கனைகள் அந்த வழக்கத்தை மாற்றியுள்ளனர்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 10