பயங்கரவாத எதிர்ப்பு

 1. சென்னை மழை

  அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Follow
  next
 2. சென்னை மழை

  வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow
  next
 3. சல்மான் ரவி

  பிபிசி செய்தியாளர்

  மாவோயிஸ்ட்

  காட்டில் நீண்ட தூரத்துக்கு ரத்த தடயங்கள் இருந்தன. எனவே, ஒன்று இறந்த அல்லது, காயமடைந்த தங்கள் போராளிகளை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது என்றார் போலீஸ் அதிகாரி.

  மேலும் படிக்க
  next
 4. மீனா லாமி மற்றும் பால் பிரவுன்

  பிபிசி மானிட்டரிங்

  தாலிபன் போராளி.

  சமீப நாட்களாக தாலிபன்கள் ஐஎஸ் அமைப்பின் இருப்பை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் அவர்களின் வலுவை குறைத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் தாலிபன்களின் வலுக்கோட்டைகளிலும் ஐஎஸ் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காபூல் மருத்துவமனை மீதான தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. உமர் ஃபாரூக்

  பாதுகாப்பு ஆய்வாளர், பிபிசி உருதுவுக்காக

  ஐ.எஸ்.ஐ.

  இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ, பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ஏஜென்சிகளான சிஐஏ மற்றும் எஃப்பிஐ ஆகியவற்றுடன் டஜன் கணக்கான கூட்டு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டன. மறுபுறம் பாகிஸ்தானுக்குள் உள்ள சமயக்குழுக்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவந்தன.

  மேலும் படிக்க
  next
 6. Sudan's military dissolves civilian government and arrests leaders

  தலைநகர் கார்தூமில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  Follow
  next
 7. பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி - என்ன நடந்தது?

  பிரிட்டன் எம்.பி
  Image caption: டேவிட் அமேஸ், பிரிட்டன் எம்.பி - எஸ்ஸெக்ஸ் தேவாலய வளாகத்தில் இன்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டார்.

  கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

  பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

  பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி தாக்கப்பட்ட சம்பவத்தில் வேறு எவரையும் தாங்கள் தேடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

  1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 8. ஆப்கன் மசூதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  ஆப்கானிஸ்தான்

  ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா பிரிவினர் தொழுகையில் ஈடுபடும் பீபி ஃபாத்திமா மசூதியில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது. உள்ளூர் செய்தியாளரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த தாக்குதலில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

  மூவரில் ஒருவர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை மசூதிக்கு வெளியிலும் மற்ற இருவர் அதே நேரத்தில் உள்ளேயும் வெடிக்கச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

  இது குறித்து விரிவாக படிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

  ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 32 பேர் காயம்

 9. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஐவர் பலி

  மொஹித் கந்தாரி ஜம்முவில் இருந்து, பிபிசி இந்திக்காக

  இந்திய ராணுவம்

  ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பலியானார்கள்.

  எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் ஆயுததாரிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் தேவ்ந்திர ஆனந்த், "வெகு தூரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஒரு ஜேசிஓ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பூஞ்ச் பகுதியில் திங்கட்கிழமை காலையில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியாகியுள்ளனர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.

  தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த நம்பகமான உளவுத்தகவல் அடிப்படையில் சூரன்கோட் தாலுகாவுக்குக் கீழ் உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

  தாக்குதல் நடவடிக்கையில் படுகாயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

  உயிரிழந்தவர்களில் ஒருவரான நாயக் சுபேதார் ஜஸ்விந்தர் சிங், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜன் சிங் ஆகியோர் பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்தவர்கள். சிப்பாய் சரஜ் சிங் உத்தர பிரதேசத்தின் ஷாஹ்ரன்பூரைச் சேர்ந்தவர். வைசாக், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  View more on twitter
 10. Afghan men stand next to an ambulance after a bomb attack at a mosque in Kunduz, Afghanistan, 8 October 2021

  ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13