அஜித்

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  நடிகர் அஜித்

  ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கிறது 'வலிமை' திரைப்படம். மேலும், அஜித் சினிமாவிற்குள் நுழைந்து 30 வருடத்தில் நுழைவதை அடுத்து படத்தின் முதல் பாடலும் நேற்று இரவு வெளியானது. நடிகர் அஜித்தின் 30 வருட திரையுலக பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 2. ‘வலிமை’ முதல் பாடல்: ‘வேற மாதிரி’ இன்று வெளியீடு

  ச. ஆனந்தப்பிரியா

  நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாக இருக்கிறது. இது குறித்து, இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

  இன்று பாடல் வெளியாக என்ன காரணம்?

  திரையுலகில் தனது 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அஜித். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #30YearsOfAjithKumar என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  இதனை கொண்டாடும் விதமாகவே இன்று பாடல் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. பாடல் வெளியாக இருக்கிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் அதனை தனது ட்வீட் மூலம் உறுதி செய்தார்.

  பாடலின் லிரிக்கல் வீடியோ மட்டும் இன்று வெளியாகும் நிலையில், படம் வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

  நடிகர் அஜீத்துக்கு இரண்டாவது முறையாகவும், யுவன் இசையில் நான்காவது முறையாகவும் பாடல் எழுதியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

  View more on twitter
 3. Image tweeted by boney kapoor

  கடந்த வருடம் நடிகர் அஜி த் பிறந்தநாளின் போதே, முதல் பார்வை வெளியிட திட்டமிட்டு தயாரிப்பு தரப்பு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அப்போது கொரோனா முதல் அலையின் தீவிரம் காரணமாக தள்ளிப்போனது.

  மேலும் படிக்க
  next
 4. வலிமை அப்டேட் கிடைத்தது

  அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

  அஜித் ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த வலிமை அப்டேட் கிடைத்தது. மோஷன் போஸ்டரை வெளியிட்டார் போனி கபூர்.

  கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இது இந்தி படமான 'பிங்க்' படத்தின் ரீமேக். 'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹெச். வினோத், அஜித் கூட்டணி இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், 'காலா' ஹூமா குரேஷி, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

  வலிமை திரைப்படம் பற்றிய தகவல்கள் பலரிடமும் தன் ரசிகர்கள் கேட்டுவருவது தன்னை வருத்தமடையச் செய்வதாக, அறிக்கை மூலம் சென்ற பிப்ரவரியில் அஜீத்குமார் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  அஜித் குமாரின் ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்பதை வழக்கமாக வைத்திருந்தனர். பிரபலங்களையும் tag செய்துவந்தனர். இது பல தருணங்களில் கேலிக்குள்ளானது.

  youtube valimai update
 5. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  valimai update

  கடந்த வருடமே கொரோனா லாக்டவுன் காரணமாக அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருந்த படத்தின் முதல் பார்வை தள்ளி போனது. இதற்கு பின்பு லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்தது.

  மேலும் படிக்க
  next
 6. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  அஜித்

  வலிமை அப்டேட் எப்போது என்று கேட்டு வந்த நடிகர் அஜித் குமாரின் ரசிகளுக்கு எதிர்மறையான அப்டேட்தான் கிடைக்கும் போலிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. தமிழ்நாட்டில் இன்று நடந்தவை - ஓர் அலசல்

  தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து பிபிசி தமிழின் சிறப்பு ஃபேஸ்புக் நேரலை.

  View more on facebook
 8. சைக்கிளில் வந்த விஜய்; மொபைலை பிடுங்கிய அஜித்

  நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தங்களது முகக்கவசம் மற்றும் சைக்கிளில் உள்ள நிறத்தை குறியீடாக பயன்படுத்தி இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  ஆனால், வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி குறுகியதாக இருந்ததாலும், கார் நிறுத்த இடம் இல்லாததாலும் தான் அவர் சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பு கூறுகிறது.

  View more on youtube
 9. சைக்கிளில் விஜய்

  நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தங்களது முகக்கவசம் மற்றும் சைக்கிளில் உள்ள நிறத்தை குறியீடாக பயன்படுத்தி இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 10. 6:40 மணிக்கே வந்த அஜித்

  வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட திருவான்மியூர் குப்பம் கடற்கரைச் சாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 6:40 மணிக்கே தனது மனைவியுடன் வந்துவிட்டார் அஜித். வாக்குப் பதிவு 7 மணிக்குத்தான் தொடங்கும் என்பதால் வாக்குச் சாவடியின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

  அந்த நேரத்தில் அஜித் வரப்போகிறார் என்ற அறிந்திருந்த ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். அவரைப் பார்ப்பதற்காகவும் செல்பி எடுப்பதற்காகவும் ரசிகர்கள் முயற்சித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்துக்குள்ளான அஜித், ரசிகர் ஒருவரின் திறன்பேசியை பிடுங்கினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் விவாதமானது.

  View more on twitter
பக்கம் 1 இல் 3