மெக்ஸிகோ

 1. எக்வடோர் சிறை கைதிகள் சண்டையில் உயிர் பலி 100ஐ தாண்டியது

  எக்வடோர் சிறை
  Image caption: எக்வடோர் சிறையின் முழு கட்டுப்பாடும் தற்போது தங்கள் வசம் வந்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.

  எக்வடோர் சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சிறை வன்முறை என கருதப்படுகிறது.

  குயாகுவில் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

  மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் எக்வடோரியன் கும்பல், லிடோரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். எக்வடோரிலேயே இதுதான் மிக ஆபத்தான சிறைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

  மோதலில் ஈடுபட்ட கைதிகளில் சிலர் கையெறி குண்டுகளை வீசியதாக காவல்துறை தலைவர் ஃபாஸ்டோ புவானாகோ தெரிவித்தார்.

  அங்கு நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர 400 காவல்துறையினர் தேவைப்பட்டது.

  எக்வடோரில் தற்போது செயல்படும் சக்திவாய்ந்த மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் இந்த கைதிகள் எழுச்சி நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்குள்ள நிலைமை பயங்கரமாக இருப்பதாக எக்வடோர் சிறைத்துறை இயக்குநர் பொலிவார் கார்சான் தெரிவித்தார். "அந்த சிறையின் கட்டுப்பாடு நேற்று, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு காவல்துறை வசம் வந்தது. ஆனால் நேற்றிரவு வேறு இடத்தில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்டது. இன்று காலை முழு கட்டுப்பாடும் காவல்துறை வசம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

  மெக்சிகோவின் சக்திவாய்ந்த சினாலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் லாஸ் கொனேராஸ் என்ற எக்வடோரிய கும்பல் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், சினோலோவா போட்டியாளர்களிடம் இருந்து எக்வடோர் முதல் மத்திய அமெரிக்கா வரையிலான கடத்தல் பாதையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் எக்வடோரிய குழுக்களுடன் கூட்டணி சேர ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் என்ற மெக்சிகோ குற்றக்கும்பல் முயன்று வருகிறது. எக்வடோர் சிறைச்சாலை, காவலில் வைக்கப்பட வேண்டிய கைதிகளின் எண்ணிக்கையை விட 30 சதவீதம் கூடுதலாக உள்ளது என்று அதன் அதிபர் லாஸ்ஸோ கடந்த ஜூலை மாதம் தான் தெரிவித்திருந்தார்.

  இதைத்தொடர்ந்து, சிறையில் கைதிகளின் நெரிசலை தவிர்க்க குற்றச்செயல்களுக்கான தண்டனை காலத்தில் பெரும்பாலானவற்றை கழித்தவர்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தப் போவதாக லாஸ்ஸோ கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சிறை வன்முறை நடந்துள்ளது.

  எக்வடோர் சிறை
  Image caption: சிறைக்குள் உள்ள தங்களுடைய உறவினர்களுக்கு என்ன ஆனது என்பதை அறிய அதன் வளாகத்துக்கு வெளியே பல கைதிகளின் உறவினர்கள் திரண்டுள்ளனர்.
 2. அமெரிக்க குடியேறிகள்

  டெக்சாஸ் - மெக்சிகோவை இணைக்கும் பாலத்தின் அருகே ஆயிரக்கணக்கான குடியேறிகள் முகாம்களை அமைத்து மிக மோசமான சூழலில் வசித்து வருகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆஸ்டெக் பேரரசின் நரபலி வரலாறு

  உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது

 4. Video content

  Video caption: அழகை பராமரிக்க உடலுறவுக்கு துணியும் பெண்கள்: யார் இவர்கள்?

  "என் அறுவை சிகிச்சைக்கு நீ காசு தந்தால் ஆறு மாதங்கள் என் உடல் உனக்கு சொந்தம்"

 5. லிண்டா ப்ரெஸ்லே

  பிபிசி செய்திகள், குலியகன்

  கிம் கர்தாஷியன்

  நார்கோ கலாச்சாரம் வந்தபிறகு பெண்கள் என்பவர்கள் ஆண்களால் உடைமையாக்கப்படும் பொருட்கள் என்பது போன்ற நிலை வந்துவிட்டது என்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: பெருந்துளை தங்கள் வீட்டை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் மெக்சிகோ மக்கள்

  சிங்க்ஹோல் என்றழைக்கப்படும் பெருந்துளை, மெக்சிகோவின் பியூபலா நகரத்தில் விரிவடைந்து வருகிறது. அது தங்களின் வீடுகளை விழுங்கிவிடுமோ என அச்சத்தில் இருக்கிறார்கள் நகரவாசிகள்.

 7. மெக்சிகோ

  அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஷீட்டுகள் போர்த்திய நிலையில் சிறார் குடியேறிகள் தடுப்பு முகாம்களில் வசிக்கும் படங்கள், அவர்கள் நடத்தப்படும் நிலை குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: ஆயுள் சிறையில் இருக்கும் கணவர் தப்பிக்க உதவிய மனைவி கைது
 9. எல் சாப்போ

  2009ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பில்லியனர்கள் பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு, உலகின் 701-வது மிகப் பெரிய பணக்காரராக எல் சாப்போ இடம்பிடித்திருந்தார் எல் சாப்போ.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: மரண பயத்தை காட்டும் மண்டை ஓடு கோபுரம் - ஆஸ்டெக் பேரரசின் அதிரவைக்கும் வரலாறு

  மெக்சிகோ சிட்டி நகரில் ஓர் அசாதாரணமான பழங்கால மனித மண்டை ஓடுகள் கோபுரத்தின் மேலதிக பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பக்கம் 1 இல் 3