மியான்மர்

 1. புதுச்சேரி பாஜக

  மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்துக்கு வந்த அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐ.நா அரிதான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் ராணுவத்தால் கடுமையாக நசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 2. ஆங் சான் சூ ச்சீ: மியான்மர் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது

  ஆங் சான் சூ ச்சீ

  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய ராணுவ நிர்வாகம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.

  கொரோனா விதிகளை மீறியது, உரிமம் இல்லாமல் வாக்கி டாக்கி கருவிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் தற்போதைய விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

  இது தவிர அவர் மீது ஊழல் முறைகேடு மற்றும் அலுவல்பூர்வ ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை பின்னர் நடத்தப்படும் என்று தெரிகிறது.

  ராணுவ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. எதிர்கால தேர்தல்களில் ஆங் சான் சூ ச்சீ போட்டியிடுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  75 வயதாகும் ஆங் சான் சூ ச்சீ, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ராணுவ நிர்வாகத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அவ்வப்போது நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது மட்டும் சில நிமிடங்கள் அவரை சிலர் பார்த்துள்ளனர்.

  அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ராணுவ நிர்வாகம் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அனுமதி கோரியுள்ளனர்.

  இது தவிர, ஆங் சான் சூ ச்சீ மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

  கடந்த வாரம் ஆங் சான் சூ ச்சீ மீது சட்டவிரோதமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் வாங்கியது மற்றும் சுமார் 11 கிலோ தங்கம் வைத்திருந்ததாக மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

  கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவ தலைமை, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.

  ஆனால், சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள், அந்த தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக கூறினார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் ஆங் சான் சூ ச்சீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  ஆங் சான் சூ ச்சீ
 3. தனது வீட்டில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பான் இ பியூ

  என்னை கடைசியாக ஒருமுறை அம்மா என்று அழைப்பதைக் கேட்க ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. உடல் எங்கும் ரத்தம். பார்க்கவே எனக்குத் துணிவில்லை. உடலை வீட்டுக்கு எடுத்த வருவதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை

  மேலும் படிக்க
  next
 4. ராகவேந்திர ராவ்

  மோரே (மணிப்பூர்), இந்திய - மியான்மர் எல்லை

  தமிழர்கள்

  ஆரம்பகால தமிழ் குடும்பங்கள் மோரேயில் ஓர் ஆலமரத்தை வழிபட்டு வந்தன. படிப்படியாக, மற்ற தமிழ்ச் சமூக மக்களும் அந்த மரத்தை வணங்க ஆரம்பித்து அது வளர வளர, அங்கே ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. மியான்மர்

  "இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்" என மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட் கூறியதாக, மியான்மர் நவ் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. இந்த சிறுமி எல்லையில் பதுங்கி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்

  சட்டவிரோதமான குடியேற்றங்கள் என்பது இந்தியாவைப் பொருத்தவரை அரசியல் தூண்டலுக்குரிய அம்சம். அதுவும் வரலாற்றில் ஏராளமான அகதிகளை ஏற்றிருக்கும் மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. மியான்மர்

  மியான்மர் தூதரகத்தின் ராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், இனி க்யாவ் ஸ்வார் மின் மியான்மர் நாட்டின் பிரதிநிதி அல்ல எனவும் அந்த ராணுவ அதிகாரி கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  மேலும் படிக்க
  next
 8. ஷங்கர் வி

  பிபிசிக்காக

  திருப்பதி

  இந்திய எல்லைக்கு 7கிமீட்டர் தொலைவில் தான் இந்த முடி கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட முடிகளின் மதிப்பு 1.8 கோடிகளாக இருக்கும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. ஹான் லே

  இன்று என் மியான்மர் நாட்டில் பல மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்” “தயவு செய்து மியான்மர் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை என கூறினார் 22 வயது இளம் அழகி ஹான் லே.

  மேலும் படிக்க
  next
 10. மியான்மர்

  இதுவரை 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் துப்பாக்கிசூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4