பால் பண்ணை

 1. ஹரியாணாவில் மாவட்ட அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் தடுத்து வைப்பு

  View more on twitter

  ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய நடவடிக்கையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.

  ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

  முன்னதாக விவசாயிகள் திட்டமிட்டிருந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

  இதையடுத்து விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தில் சுஷில் கஜ்லா என்ற விவசாயி காயம் அடைந்து உயிரி்ழந்ததாக விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டினர்.

  ஆனால், அந்த விவசாயி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் செயல்படுகின்றன.

  அவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

  அதைக் கண்டித்து ஹரியாமா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 2. தோமர்

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், வரும்போது விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டு வர வேண்டும் என்கிறார் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

  Follow
  next
 3. வேளாண் சட்டங்கள்: விவசாயிகளுக்கு செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசு - ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

  சிதம்பரம் மோதி அரசு

  இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடையும் நாளில் அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார் இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?," என்று குறிப்பிட்டுள்ளார். "அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி," என்றும் அவர் கூறியுள்ளார்.

 4. மு.பார்த்தசாரதி

  பிபிசி தமிழுக்காக

  பனை தொழிலாளி பால் பாண்டியன்

  பால் பாண்டிக்கு பெருந்தலைவர் காமராசரை மிகவும் பிடிக்குமாம். அதனால், முதன் முதலாக அவரின் சிற்பத்தை பனையில் செய்ய முடிவெடுத்திருக்கிறார். கல், மண், மெழுகு போன்றவற்றால் செய்யப்படும் சிற்பங்களைப் போல அல்ல பனை ஓலை சிற்பம். ஓலையில் உருவங்களை செய்வதென்பது பெரும் சவால் நிறைந்த வேலை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. வெங்கட் ரெட்டி

  விவசாயிக்கும் மண்ணுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பந்தத்தை நாம் விளக்க தேவையே இல்லை. ஆனால் அதே மண்ணை ஒரு உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம் என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தலா வெங்கட் ரெட்டி நிரூபித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. கூ

  மத்திய அரசு குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களில் ஒரு சில பக்கம் மீது மட்டும் கட்டுப்பாடுகளை விதித்த நிறுவனம் அடுத்த சில மணி நேரத்தில் அதை நீக்கியது. இதைத்தொடர்ந்தே ட்விட்டர் நிறுவனம் மீதான தனது அதிருப்தியை இந்திய அரசு "கூ" என்ற புதிய இந்திய செயலி வாயிலாக வெளிப்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. விவசாயிகள்

  விவசாயிகளின் வாள் தாக்குதலை சமாளிக்க, நீணட வாள், கேடயங்களுடன் காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். டெல்லி எல்லையில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 26 அன்று டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதனால் எல்லைகளில் வழக்கத்தை விட அதிகமாக துணை ராணுவ படை பலத்தை மத்திய அரசு பெருக்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. விவசாயிகள் போராட்டம்

  "வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு நாம் அனைவருமே பொறுப்பு. நமது கரங்களில் ரத்தக்கறைகளோ பாதிக்கப்பட்டவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதையோ பார்க்க நாங்கள் விரும்பவில்லை," என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. அர்விந்த் சாப்ரா (சண்டிகர்)

  குஷால் லாலி (டெல்லி)

  விவசாயிகள் போராட்டம்

  "விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் 26 ஆம்தேதி டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் டிராக்டர்களை ஓட்டி ஏராளமான பெண்கள் வரலாற்றை உருவாக்குவார்கள்'' என ஹரியாணாவில் ஜிந்த் அருகே ஒரு நெடுஞ்சாலையில் தனது டிராக்டரை ஓட்டி வந்த மகிளா ஏக்தா மோர்ச்சாவைச் சேர்ந்த சியிகிம் உச்சன் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 10. விவசாயிகள் போராட்டம்

  கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த லங்கர் உணவுப்பந்தியில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டு உணவை உட்கொண்டனர். ஆனால், திங்கட்கிழமை பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் லங்கர் உணவை உட்கொள்ளச்சென்றபோது, அமைச்சர்கள் தனியாக அதிகாரிகளுடன் கூட்ட அரங்கில் சுமார் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2