தொல். திருமாவளவன்

 1. வங்கிகள் தனியார்மய மசோதாவை கைவிட இந்திய நிதியமைச்சரிடம் விசிக கோரிக்கை

  நிர்மலா சீதாராமன்
  Image caption: இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார்.

  பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

  இந்த சந்திப்பின்போது அக்கட்சியைச் சேர்ந்தவரும் எம்.பி.யுமான ரவிக்குமாரும் உடனிருந்தார்.

  இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், "எந்தெந்த வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்பது இதுவரை முடிவாகவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த கூட்டத்தொடரில் மசோதா பட்டியலிடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

  மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமனிடம் இருவரும் தெரிவித்தனர்.

  இந்த விவகாரத்தில் தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறு வலியுறுத்தியதாகவும் நிவாரண சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றும் ரவிக்குமார் கூறினார்.

 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  சீமான்

  "சீமானின் பேச்சுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக உள்ளன. நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கும்போது இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் சீமானுடன் இருந்தனர். தற்போது அவர்கள் யாரும் இவருடன் இல்லை" என்கிறார் வன்னி அரசு

  மேலும் படிக்க
  next
 3. ஆளுநர் பதவியேற்பில் பங்கேற்காதது ஏன்? திருமா

  தொல் திருமாவளவன்.

  தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

  சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

  நீட் தேர்வு தமிழக மாணவர்களை பழிவாங்கி கொண்டிருக்கிறது. எனவே நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டத்திற்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.

  மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது . தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. நாகலாந்து மாநிலத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.

  எனவேதான் அவரது நியமனத்தை திரும்பபெற வேண்டும் என்று விசிக கோரிக்கை விடுத்தது. ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது,ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் நான் பங்கேற்கவில்லை அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் தலைவிரித்து ஆடியது.

  இன்றைக்கு அது வெளிச்சத்துக்கு வருகிறது. இதை அதிமுகவே அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்ப்பே, விமர்சனமே அவர்களிடம் இருந்து வரவில்லை. கடமையை செய்யும் ஊடகவியலாளர்களை தாக்குவது கண்டத்திற்குரியது.

  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திமுக உடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது.

  திமுக அரசு என்பதைவிட சமூக நீதி அரசு என்பதே பொருத்தமானது என்று கூறினார்.

 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  ஆர்.என்.ரவி

  ` நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்?

  மேலும் படிக்க
  next
 5. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் புதிய தீர்மானம் - தொல். திருமாவளவன்

  ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்
  Image caption: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை காலத்துக்கு பிறகும் சிறையில் இருந்து வரும் ஏழு பேர்.

  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய தீர்மானம் ஒன்றை இந்திய அரசியலமைப்பின் 161ஆவது விதியின் கீழ் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை கூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூறினர்.

  அதனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததார்.

  இதனை நீதிமன்றத்தில் ஆளுநர் தனது பதிலாக தெரிவித்தார்.தமிழ்நாடு ஆளுநரின் இச்செயல் மாநில அரசையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும் என்று சட்ட வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.இந்l நிலையில் உச்ச நீதிமன்றம் 03.08.2021 அன்று 'ஹரியானா-எதிர்- ராஜ்குமார்' என்ற வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்ட உறுப்பு எண் 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநரின் ஒப்புதலானது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், "அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் -161 இன் கீழும் தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தமிழ்நாடு அரசுக்கு அளித்த மனுவின் மீது மாநில அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்," என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, இதனடிப்படையிலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளின்படியும்,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு அரசு உடனே அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 6. தமிழ்நாட்டில் ஆண்களுக்குப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதா? அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதில்

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  ராஜ கண்ணப்பனுடன் திருமாவளவன் சந்திப்பு
  Image caption: தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனுடன் திருமாவளவன் சந்திப்பு

  தமிழ்நாட்டில் அரசுப் பேருந்தில் எங்கேயுமே ஆண்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் கூடுதல் கட்டணம்வசூல் செய்யப்படுவதாக எதிர்க்கட்சியான அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.

  இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில், "பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் சில பகுதிகளில் அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக குறைந்தபட்சக் கட்டணமாக ஐந்து ரூபாய்தான் இருந்தது.

  இது போன்ற விதிமீறல்கள், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு, திருப்பெரும்புதூர் வழித்தடங்களில்சாதாரணமாக நடக்கிறது. இது அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியமல் நடக்கிறதா என்பதுதெரியவில்லை," என்று கூறியிருந்தார்.

  இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், "முதலமைச்சருக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுப்பதற்காக தவறான தகவல்களைக் கொடுக்கிறார் ஓ.பி.எஸ். அவர் சொல்வதுபோன்ற கட்டண உயர்வு எங்கேயும் இல்லை. எந்த போக்குவரத்துக் கழகத்திலும்வசூலிக்கப்படவில்லை. இந்தத் துறையில் 1,22,000 பேர் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள். யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

  ஓ.பி.எஸ். தன் இருப்பைக் காண்பிப்பதற்கு அவ்வப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அது சரியானதல்ல. விழுப்புரத்தில் ஒரே ஒரு இடத்தில் இதுபோல தவறு நடந்தது. அந்த போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் அந்த நடத்துனரை இடைநீக்கம் செய்திருக்கிறார். இதை வைத்துக்கொண்டு, எல்லாப் போக்குவரத்துக் கழகங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டதாகக் கூறுவது தவறு" என்று தெரிவித்துள்ளார்.

  தன்னைப் பார்க்க வந்த திருமாவளன், சாதாரண இருக்கையில் உட்கார வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, தானும் அவரும் நீண்ட கால நண்பர்கள் என்றும் அவரேதான் அந்த இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்ததாகவும் ராஜ கண்ணப்பன் பதிலளித்தார்.

 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  திருமாவளவன்

  `உங்கள் வீட்டுப் பெண்களை எல்லாம் காதலித்து மணம் செய்ய தி.மு.க பணம் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளனர். எனவே, பானைக்கு ஓட்டுப் போடாதீர்கள்' என்ற பிரசாரத்தை அ.தி.மு.க கூட்டணி சார்பில் செய்துள்ளனர். இதனால், கூட்டணிக் கட்சியினர் சிலர் பிரசாரத்துக்கே வராமல் இருந்தையும் வி.சி.க நிர்வாகிகள் அதிர்ச்சியோடு கவனித்துள்ளனர். இதையும் மீறி திருப்போரூரில் வி.சி.க வென்றுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  HBL PLANT

  கொரோனா பரவலால் தடுப்பூசி மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் சூழலில், செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 9. விடுதலை சிறுத்தைகள் கட்சி

  கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள தேவிகுளம், பீர்மேடு, கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் எந்த மாநிலத்தோடு சேர விரும்புகிறார்கள் என கண்டறிந்து அந்த மாநிலத்தோடு அவர்களை சேர்க்க வலியுறுத்தப்படும் என்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை.

  மேலும் படிக்க
  next
 10. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தொல் திருமாவளவன்

  வானூர், நாகப்பட்டினம், அரக்கோணம், காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வேட்பாளர்கள் நல்லமுறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில் நடக்கும் சில சம்பவங்கள் தலைமையை கொதிப்படைய வைத்துவிட்டன" என்கிறார் வி.சி.கவின் மாநில நிர்வாகி ஒருவர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3