மு.க. ஸ்டாலின்

 1. கொரோனா

  பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

  Follow
  next
 2. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வீரப்பன்

  "நீண்டகாலம் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதைவிட அதிகாரிகள்தான் முடிவெடுக்கின்றனர். சிறைவாசிகளில் குறிப்பிட்ட சிலரின் விடுதலையை தாமதப்படுத்தும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன."

  மேலும் படிக்க
  next
 3. ஜோ. மகேஸ்வரன்

  பிபிசி தமிழ்

  தமிழக கன மழை

  தமிழ்நாட்டுக்கு தனி பருவ கால வேளாண் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தொடர்ந்து பருவமழை, புயல் பேரிடர்களால் பாதிக்கப்படுவதால், தமிழ்நாட்டை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

  மேலும் படிக்க
  next
 4. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

  இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி, மணிகண்டன்.

  நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்

 5. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்

 6. "சென்னை அணியின் தலைவராக தோனியே தொடர வேண்டும்": மு.க. ஸ்டாலின்

  எத்தனை சீஸன்கள் வந்தாலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகத் தொடர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது கடைசி ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்குமென சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருக்கிறார்.

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல்லின் தலைவரான பிரிஜேஷ் பட்டேல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  chennai super kings
 7. ஐ.பி.எல் 2021 வெற்றிக் கோப்பையுடன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

  2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 8. வேளாண் சட்டங்கள்: கூட்டத்தொடர் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுங்கள் - மு.க. ஸ்டாலின்

  விவசாயிகள்

  "நாடாளுமன்றத்தில் முறையாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பராக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை அறிவித்திருப்பதை மனபூர்வமாக வரவேற்கிறேன். இது கடந்த ஓராண்டுகாலமாக இம்மூன்று சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய வேளாண் பெருங்குடி மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை இந்தியா முழுக்க நடந்துவந்த இடைவிடாத போராட்டமே மனமாற்றம் செய்து இறங்கி வர வைத்தது என்று கூறியுள்ளார்.

  இந்த மூன்று சட்டங்களும் கொண்டுவரப்பட்டபோது தொடக்க நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தோம். மக்கள் மன்றத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழவர் சங்கங்கள் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டோம். சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தோம். மூன்று சட்டங்களுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் போடச் சொன்னோம். ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சி அதைச் செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இன்னும் சொன்னால் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பரப்புரையில் ஈடுபட்டது. அந்தச் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களை வாதத்திற்கு அழைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. பா.ஜ.க.வைவிட அதிகமாக அவர்தான் ஆதரித்தார். இவரை அழைத்துச் சென்று டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு விளக்கம் சொல்ல வைக்கலாமே என்று நான் அப்போது சொன்னேன். அந்தளவுக்கு அ.தி.மு.க. அந்தச் சட்டங்களை ஆதரிப்பதில் தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியது. உழவர்கள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலை. அது குறைந்தபட்சம் சொல்லாகக் கூட இல்லை. அதனை வேளாண் சட்டம் என்று சொல்வது கூட தவறானது. அது உழவர்களை நிலங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம் ஆகும் என்று மிகத் தெளிவாக முடிவெடுத்த தி.மு.கழகம் இச்சட்டங்களை எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் என்று சொன்னோம். அதன்படி கழக ஆட்சி அமைந்ததும் 28.08.2021 அன்று நானே முதலமைச்சர் என்ற முறையில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  கடந்த ஓராண்டுகாலமாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நாங்கள் சொன்னதே சரியானது என்பதை இப்போது பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானது தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலம் இடைவிடாது போராடி வரும் உழவர் பெருங்குடி மக்களின் தியாகம்தான். கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் டெல்லிக்கு வந்து நேரடியான போராட்டத்தை உழவர்கள் தொடங்கினார்கள். ஓராண்டு காலத்தை எட்டுவதற்கு இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ளன. நவம்பர் 26-ஆம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உழவர் சங்கங்கள் தயாராகி வந்தன.

  வெயிலையும் மழையையும் நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், உணவைப் பற்றிக் கவலைப்படாமல், உடல்நலனைப் பற்றி கவலைப்படாமல் உழவர்கள் போராடினார்கள். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். ஆனாலும் தங்களது போராட்டக் குணத்தை விடாமல் கடைப்பிடித்தார்கள் உழவர்கள். உழவர்கள் போராட்டம் நவம்பர் 26-க்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கும் என்பது தெரிந்தோ, அல்லது நடக்க இருக்கும் சில மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தோ இத்தகைய முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இவ்வளவுப் போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகுதான் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், திரும்பப் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.

  நாடாளுமன்றத்தில் முறையாக இம்மூன்று சட்டங்களும் திரும்பப் பெறக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய உழவர்களை அழைத்து ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி அளித்து, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக உழவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இந்திய வேளாண்மை செழிக்க வேண்டுமானால் அது உழவர்களின் மூலமாகத்தான் செழிக்க வேண்டும். அதற்கு அடித்தளமான ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை இனியாவது ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் எனவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

 9. ஸ்டாலின் ராகுல்

  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்," என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. வந்துகொண்டிருக்கும் செய்திவேளாண் சட்டங்கள்: பிரதமரின் அறிவிப்பு உழவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: மு.க. ஸ்டாலின்

  வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட அறிவிப்பு, முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

  View more on twitter
  View more on twitter
பக்கம் 1 இல் 39