பஞ்சாப் கிங்ஸ்

 1. CSK vs PBKS:சென்னை அணிக்கு தொடர்ந்து 3வது தோல்வி

  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான, நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

  இன்றைய தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும்.

  எனினும் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் இன்றைய தோல்வியால் தற்போதைக்கு சென்னை அணிக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை.

  விரிவாகப் படிக்க: சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 3வது தோல்வி; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் சதத்தை தவறவிட்டார்

  https://www.bbc.com/tamil/sport-58831332
  Image caption: https://www.bbc.com/tamil/sport-58831332
 2. சென்னை அணியின் டூப்ளெஸ்ஸீஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா

  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான, நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. பிளே ஆஃப் பெட்டியில் நான்காவதாக ஒரேயொரு இடம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

  இப்போது மூன்று அணிகள் பிளே ஆப் இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், பிளே ஆஃப் பெட்டியில் நான்காவதாக ஒரேயொரு இடம் மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆனால் போட்டியில் நான்கு அணிகள் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 4. MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்

  தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. இந்திய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இக்பால் சிங் லால்புரா நியமனம்

  இக்பால் சிங் லால்புரா
  Image caption: இக்பால் சிங் லால்புரா

  தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தன் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை, இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் இக்லாப் சிங் லால்புரா. இவர் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.

  புதிய பதவியில் தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு இக்பால் சிங் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இக்பால் சிங் லால்புரா.

  சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

  இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் பட்டியலில் சமணர்கள் சேர்க்கப்படும்வரை தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  அவர்களின் நலன்களைக் காக்க தேசிய அளவில் தனி ஆணையம் அமைக்கப்பட்டது போல மாநிலங்கள் அளவிலும் அத்தகைய மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய சட்டம் கூறியது.

  இதில் தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

  பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான இக்பால் சிங் லால்புராவுக்கு தேசிய ஆணையம் ஒன்றின் தலைமை பதவி வழங்கப்பட்டிருப்பது அந்த மாநில அரசியலில் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது.

  View more on twitter
 6. IPL 2020: Kings XI Punjab Kolkata Knight Riders sixth defeat

  தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. மந்தீப் சிங்

  போட்டிக்கு முந்தைய நாள் தந்தை மரணமடைந்தபோதிலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. பஞ்சாப் அணி

  சூப்பர் ஓவரில், போட்டியில் இரண்டாவதாக விளையாடிய அணிதான் முதலில் ஆட வேண்டும் எனவே அந்த விதிப்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது அந்த அணியின் கே.எல்.ராகுல் மற்றும் பூரன் களமிறங்கினர். மும்பை அணி சார்பில் பும்ரா பந்து வீசினார்.

  மேலும் படிக்க
  next
 9. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  BCCI / IPL

  கெயிலின் அதிரடி வருகை மற்றும் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் போன்றோர் பஞ்சாபின் பிளே ஆஃப் கனவுக்கு வலுவூட்டுவது உண்மை தான்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஐபிஎல் 2020 CSK vs KXIP: தொடர் தோல்விக்கு பின் வென்ற சி.எஸ்.கே - எப்படி சாத்தியமானது?

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பக்கம் 1 இல் 2