ஸ்டெர்லைட்

 1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: புதிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

  பிரபுராவ் ஆனந்தன்

  மதுரை உயர் நீதிமன்ற கிளை
  Image caption: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை

  தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தயாரிக்க தொழிற்சாலை மூலப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியே கொண்டு வர அனுமதி கோரிய வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

  தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் அவசரகால பணிகளை மேற்கொள்ளும் விவகாரம் தொடர்பாக அதன் மேலாளர் சுமதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

  இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

  மனுதாரர் தரப்பில் ரூ.200 கோடி மேல் மதிப்புள்ள மூலப்பொருள்களை தொழிற்சாலையின் உள்ளே உள்ளது அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

  அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

  மனுதாரர் தரப்பில் அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

  மனுவில் என்ன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?

  'தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை அனைத்து அனுமதியும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை முடியது.

  மேலும் தமிழக அரசு ஆணை 72 ன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டது

  அதன் விளைவாக அவசரகால நிலைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே அமிலம், ரசாயனம் மற்றும் பல மூலப் பொருட்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது.

  இதையடுத்து ஆலையின் உள்ளே இருக்கும் மூலப்பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு அரசாணை எண் 83-ன் படி உள்ளூர் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது.

  இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது 2132.64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்ஸிஜனை மற்றும் 7833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.

  இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர். தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை வெளியேற்றவும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

  எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணை, மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவை வெளியேற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனவும், அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள், கழிவுகள் ஆகியவை வெளியே கொண்டு வர அனுமதி அளிக்க வேண்டும்.' என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 2. ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

  ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம்

  ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டெர்லைட் இயங்க வழங்கப்பட்டு வந்த தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

  உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை சேமிக்கும் பணிகளுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சாரம், தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

  ஆலையில் இருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் ஊர்களுக்கு அனுப்பப்பட்ட பின் இதுவும் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழுக்கு தகவல்.

 3. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 10.5 மெட்ரிக் ஆக்சிஜன்

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்இருந்துபுதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

  இதுகுறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்சிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு,மேற்படி ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  புதன்கிழமை மாலை 6.00 மணி நிலவரப்படி 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. இதில்,6.50 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி,மருத்துவமனைக்கும்,4.00 மெட்ரிக் டன் பெராக்கா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

  ReplyForwardfalsefalsefalsefalse

 4. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 3ஆம் ஆண்டு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018இல் நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று, அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  இதனையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  சுற்றுச்சூழல் விதிமீறலுக்காக தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தற்போதைய கொரோனா நெருக்கடியால், செயற்கை ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு மட்டும் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

  sterlite
 5. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

  இந்தக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை மே மாதம் 14ஆம் தேதியன்று அரசுக்கு அளித்தது.

  மேலும் படிக்க
  next
 6. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

  ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

  ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டது.

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13-ம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.

  இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஆலையில் பழுதை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர்.

  இதை தொடர்ந்து தற்போது, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜன் குளிர்விக்கப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இன்று மாலை முதல் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டன.

 7. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

  ஆலையில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள டேங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.

  அரசின் வழிகாட்டுதலின் படி மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட உள்ளது என ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 8. ஸ்டெர்லைட் ஆலையில் சோதனை ஓட்டம்

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

  ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் இஸ்ரோ தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்கள் இணைந்து பழுதை சரி செய்துள்ள நிலையில் அது தற்போது சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

  இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த சோதனை ஓட்டத்தில் பழுது ஏற்படாமல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் வரும் 19-ம் தேதி முதல் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 9. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்ட ஆக்சிஜன் வாகனம்

  ஸ்டெர்லைட் ஆலையின் தளவாட பொருட்களைக் கொண்டு செல்லும் நுழைவு வாயில் முன்பாக தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

  மேலும் படிக்க
  next
 10. ஸ்டாலின்

  மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4