தலித் - முஸ்லிம்

 1. பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

  தலித் படுகொலைகள்

  தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர்.

  தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது.

  `` தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி, எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது. தகவல் பெறப்பட்ட 33 மாவட்டங்களில் 300 எஸ்.சி, எஸ்.டி மக்கள் சாதிரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அளிக்காத 5 மாவட்டங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த படுகொலை 340 முதல் 350 வரையில் நடந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது," என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 2. இந்திய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இக்பால் சிங் லால்புரா நியமனம்

  இக்பால் சிங் லால்புரா
  Image caption: இக்பால் சிங் லால்புரா

  தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தன் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை, இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் இக்லாப் சிங் லால்புரா. இவர் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.

  புதிய பதவியில் தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு இக்பால் சிங் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இக்பால் சிங் லால்புரா.

  சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில் கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

  இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் பட்டியலில் சமணர்கள் சேர்க்கப்படும்வரை தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்படி முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், பெளத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து சமூகத்தினர் மட்டுமே சிறுபான்மையினராக கருதப்பட்டனர்.

  அவர்களின் நலன்களைக் காக்க தேசிய அளவில் தனி ஆணையம் அமைக்கப்பட்டது போல மாநிலங்கள் அளவிலும் அத்தகைய மாநில ஆணையம் அமைக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் ஆணைய சட்டம் கூறியது.

  இதில் தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

  பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான இக்பால் சிங் லால்புராவுக்கு தேசிய ஆணையம் ஒன்றின் தலைமை பதவி வழங்கப்பட்டிருப்பது அந்த மாநில அரசியலில் பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது.

  View more on twitter
 3. Video content

  Video caption: மீரட்டில் முஸ்லிம் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக புகார். நடந்தது என்ன?
 4. Video content

  Video caption: ஹேமலதா லவனம்: கொள்ளையர்கள் இல்லாத கிராமத்தை உருவாக்கிய ஆந்திரப் பெண்

  இந்த கிராமத்தை பார்ப்பதற்கு ஒரு சாதாரண இடம் போல இருக்கலாம். ஆனால், அப்படி இல்லை. இந்த கிராமம் ஒரு எடுத்தக்காட்டாக இருக்கிறது.

 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  உ.பி அரசை விமர்சித்து சிசிஜியின் திறந்த மடல்

  `` முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு 2017 முதல் 2020 வரையில் 124 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதாவது, 6,476 மோதல்களில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர்."

  மேலும் படிக்க
  next
 6. சஹர் பலோச்

  பிபிசி உருது, இஸ்லாமாபாத்

  பாகிஸ்தான்

  2001ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைகளில் 2,600 ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூகத்தின் ஒரு பிரிவினரின் வெறுப்புப் பிரசாரமும் அடிப்படைவாதமும் தான் இந்தச் சமூகத்தினர் பாதிக்கப்படக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 7. கனடாவில் முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்த தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

  ஜஸ்டின் ட்ரூடோ

  கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  இந்த சம்பவத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

  அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.

  இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களை பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

  கொரோனா பெருந்தொற்றால் மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கிக் கடந்த கனடா மக்களுக்கு தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  இந்த நிலையில், குடியேறி முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து டிரக் மோதி நடந்த தாக்குதல் கனடாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

  View more on twitter
 8. மயூரேஷ் கோண்ணூர்

  பிபிசி நிருபர்

  பாலியல் கல்வி குறித்த ஒரு வழக்கில் அம்பேத்கர் தோற்ற கதை

  "அம்பேத்கர் தலித் சமூகத்தினர் மற்றும் வஞ்சிக்கப்பட்டோரின் தலைவராகத் தான் இருந்தார் என்றாலும், அவர் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அனைத்து வகுப்புகளை உள்ளடக்கிய ஒரு நவீன சமூகம் தான் அவருடைய கனவாக இருந்தது. அவர் அந்த திசையில் பயணித்துக் கொண்டிருந்தார்."

  மேலும் படிக்க
  next
 9. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி நியூஸ்

  வங்கதேசம்

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி தங்கள் நாட்டின் 50ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது சிறந்த நினைவாக இருக்கும் என வங்கதேசம் ஆழமாக நம்பியது. ஆனால், அவரது வருகைக்கு எதிராக அங்கு நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையால் குறைந்தபட்சம் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை

  இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4