தெற்காசியா

 1. இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வர ராஜீய பேச்சுவார்த்தை தொடக்கம்: டக்ளஸ் தேவானந்தா

  ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

  இலங்கை தமிழர்கள்
  Image caption: டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழில் அமைச்சர்

  இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாய் நாட்டிற்கு மீள வருகைத் தர விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதை குறிப்பிட்டார்.

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்படாமல் வாழ்ந்து வரும் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக 1259 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,200 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  இந்த நிதித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

  நாட்டிற்கு வருகைத் தர விரும்புவோரை, நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் குறித்து, இந்திய அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

  இதேவேளை, யாழ்ப்பாணம் − காங்கேசன்துறை இறங்குத்துறை அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  இந்த துறைமுகம் அபிவிருத்தி அடையும் பட்சத்தில், வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிருந்து நேரடியாக கொண்டு வர முடியும் என்றார் அவர்.

  அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில், இலகுவாக கொள்வனவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 2. ஸ்மிதா முண்டசாட்

  சுகாதார செய்தியாளர்

  ஊசி செலுத்தப்படும் காட்சி - கோப்புப் படம்

  "நம்மால் மரபணுக்களை மாற்ற முடியாது, கொரோனாவால் பாதிப்பை அதிகப்படுத்தும் அபாயமுள்ள மரபணுவைக் கொண்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியால் அதிக பலன் கிடைக்கலாம் என எங்கள் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன."

  மேலும் படிக்க
  next
 3. கப்பல்

  இந்திய கடற்படையின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக இலங்கை வந்தடைந்தன. கொழும்பு மற்றும் திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து இரு தரப்பு கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ரஞ்ஜன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து

  இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

  சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கைக்கு வருகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

  மேலும் படிக்க
  next
 5. Afghan men stand next to an ambulance after a bomb attack at a mosque in Kunduz, Afghanistan, 8 October 2021

  ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. சுசீலா சிங்

  பிபிசி செய்தியாளர்

  ஜுலியா பார்சி

  "தாக்குதல்களில் பல பெண்கள் தங்கள் கணவர்கள், தந்தையர் அல்லது சகோதரர்களை இழந்துள்ளனர். அந்தப் பெண்கள் வேறு இடங்களில் வேலை செய்து வந்தார்கள். ஆனால் இந்த தாலிபன் ஆணைக்குப் பிறகு அத்தகைய தனியான பெண்களின் நிலை என்னவாகும்?"

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

  பெண்கள் போராட்டத்தில் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கு சவுக்கடி - தாலிபன் கொடூரம்

 8. மொகமது மடி, அகமது காலித், சையது அப்துல்லா நிசாமி

  பிபிசி நியூஸ்

  ஆகஸ்ட் 15 அன்று, காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தாலிபன்கள். தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனியின் புத்தகம் அவரது மேசையிலேயே இருக்கிறது.

  ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லாம் மாறியது. சில மணி நேரங்களுக்குள்ளேயே அதிபரும் உயரதிகாரிகளும் மாயமாகிவிட்டனர். ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் காவல்துறை அதிகாரிகளும் சீருடையை மாற்றிக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: பஞ்ஷீர் பள்ளத்தாக்கு யார் வசம்: பிடித்துவிட்டதாக கூறும் தாலிபன், மறுக்கும் போராளிகள்

  பஞ்ஷீர் பள்ளத்தாக்கு யார் வசம்: பிடித்துவிட்டதாக கூறும் தாலிபன், மறுக்கும் போராளிகள் - நிலவரம் என்ன?

 10. சலீம் ரிஸ்வி

  பிபிசி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து

  பைடன்

  கடந்த 20 ஆண்டுகளில், ஆஃப்கானிஸ்தானில் நடந்த போரில் 2,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தவிர, சுமார் 4,000 அமெரிக்க ஒப்பந்ததாரர்களும் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5