மதுரை

 1. மதுரை கனமழை - புது மண்டபத்திற்குள் மழைநீர்

  மதுரையில் பெய்த கனமழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புது மண்டபத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  கனமழை காரணமாக மதுரை கீழ ஆவணி மூல வீதி முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் அங்குள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை கீழ ஆவணி மூல வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லாதவன் எச்சரிக்கை செய்தும் மாற்றுப்பாதை அமைத்துத் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புதுமண்டபத்திற்குள் தண்ணீர் நிரம்பி இருப்பதால் மாற்றுப் பாதையை பயன்படுத்துவதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டி மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  madurai rain
 2. மதுரை பெரியார் பேருந்து நிலையப் பணிகள் 95 சதவீதம் நிறைவு

  மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் 95 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  மதுரையில் 1,200கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், குன்னத்தூர் சத்திரம், வைகை ஆற்றை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

  மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார்பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் மற்றும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் 57 பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

  அதனைத் தொடர்ந்து மேலவாசல் பகுதியில் கட்டப்படும் முல்லைப்பெரியாறு குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் நகர பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  அப்போது, மதுரை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. கால்நடைகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த அந்தந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி பெரியார் பேருந்து நிலைய பணிகள் நடைபெறுகின்றன. பேருந்து நிலைய பணிகளில் எந்த மாற்றம் இல்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

  மதுரை மாநகர் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மதுரையில் 328 சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 3. விவசாயிகள்

  இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழைத் தொடக்கம் முதல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்தது. இந்த மழையால், கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வடக்குவெளி, கர்ணாவெளி, ஆளக்கரை வேலூர் உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான சம்பா தாளடி நெல்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 4. நன்மாறன் மரணம்

  மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக இருந்த போதும் எளிமையின் வாசத்தில் நேர்மையாக வாழ்ந்து வருபவர். 72 வயதிலும் தற்போதும் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க இவர் தயங்கியதில்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. ஜல்லிக்கட்டில் வென்ற காளைக்கு பரிசுத்தொகை தாமதமாவதாக வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

  பிரபுராவ் ஆனந்தன்

  ஜல்லிக்கட்டு

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற தனது காளைக்கு அறிவிக்கப்பட்டிருந்த கார் மற்றும் சான்றிதழை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  அதில், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், எனது காளை மூன்றாம் பரிசு பெற்றது. அந்த உத்வேகத்தோடு 2021 ஜனவரி 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளை பங்கேற்றது. அதிக புள்ளிகளைப் பெற்ற எனது காளைக்கு முதல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற காளைக்கு கார் ஒன்றும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பரிசு வழங்கப்படவில்லை. 2021ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற எனது காளை கருடனுக்கு கார் மற்றும் சான்றிதழை வழங்கவும் அதுவரை 2022 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

  இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.

  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தோஷ் பாபுவின் மனு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரரின் மனுவை 6 வாரங்களுக்குள்ளாக பரிசீலிக்குமாறும் மனுதாரரின் காளையே முதல் பரிசு பெற்றது என உறுதி செய்யப்பட்டால் அதற்கான பரிசை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 6. ஏ. ஆர். மெய்யம்மை

  பிபிசி தமிழுக்காக

  ஸ்டாலின்

  திமுக முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 'தமிழ்நாட்டின் முதலாவது முதலமைச்சர்' என்ற பெயர் அவருக்கு கிடைத்தது ஒரு புறமிருக்க, அவர் ஏன் பாப்பாபட்டியை தேர்ந்தெடுத்தார் என்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கவே செய்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. Actor soori facebook

  சமீபத்தில் நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாகத் தொடர்பில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் விக்னேஷ்.

  மேலும் படிக்க
  next
 8. மதுரையில் பிரம்மாண்ட பாலம் இடிந்து விழுந்தது; ஒருவர் பலி

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  மதுரையில் நத்தம் சாலையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுவந்த உயர்மட்டப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த தொழிலாளர் ஒருவர் உயரிழந்தார்.

  மதுரையில் நத்தம் சாலையில், தல்லாகுளம் பகுதியிலிருந்து செட்டிகுளம் பகுதி வரை சுமார் 7.3 கி.மீ. தூரத்திற்கு மிக நீண்ட உயர்மட்டப் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 694 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுவரும் இந்தப் பாலத்தில் இரு தூண்களுக்கு இடையிலான பகுதி இன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது.

  இதில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் குமார் தலைமையில் மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.

  தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றாக இந்தப் பாலம் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்தப் பாலத்தைப் பொறுத்தவரை இரு தூண்களுக்கு இடையிலான பகுதிகள் துண்டுதுண்டாக வேறு இடத்தில் செய்யப்பட்டு, இங்கே கொண்டு வரப்பட்டு கம்பிகளால் இணைக்கப்படுகின்றன.

  இதற்கான இயந்திரம் இன்று சோதிக்கப்பட்டுவந்த நிலையில்தான் இந்த விபத்து நேரிட்டதாகச் சொல்லப்படுகிறது.

  "இந்த இணைப்புப் பணிகள் சரியாக நடந்ததா என்பதை சோதிக்க வேண்டும். தவிர தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்ததா என்பதையும் விசாரணை நடத்த வேண்டும்" என பிபிசியிடம் தெரிவித்தார் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

  View more on twitter
 9. மதுரை ஆதீனத்தின் 293ஆம் மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பதவியேற்பு

  மதுரை ஆதீனத்தின் 293ஆம் புதிய மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பதவியேற்றிருக்கிறார்.

  292ஆம் ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் கடந்த 14ஆம் தேதி காலமானார். அவரது உடல் மடத்துக்கு சொந்தமான இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

  இந்த நிலையில், புதிய ஆதினமாக பதவியேற்றுள்ள ஹரிஹர தேசிக பரமாச்சாரியார், முதல் நடவடிக்கையாக ஆதீன நிர்வாகம் தொடர்புடைய ஆறு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

  இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 10. becauseanimals

  மதுரையில் சில இடங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டுவிட்டு வேறு இடங்களில் மிருக வதை செய்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்தவே இந்த அபராத முறையைக் கொண்டுவந்ததாகக் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7