பிரிட்டிஷ் அரசு

 1. Video content

  Video caption: ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும்

  ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும்

 2. மகாராஜா

  ஆங்கிலேயர்கள் தங்கள் காலத்தில், உள் நாட்டு இளவரசர்களைக் கோழைகளாகவும் அரசாட்சியில் கவனமின்றி சிற்றின்பத்துக்கு அடிமையானவர்களாகவும் இருந்ததாகவே சித்தரித்திருந்தார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 4. பிபிசி சீன கடல் கொள்ளையர்

  1800களின் தொடக்கத்தில் 1,200 ஆயுத பலம் நிறைந்த கப்பல்களில் 70 ஆயிரம் கடல் கொள்ளையர்களுடன் வலுவான ஒரு கூட்டமைப்புக்கு தலைவராக ஜங் யி விளங்கினார். அவரை இயக்கும் சக்தியாக ச்சிங் ஷி உருவெடுத்தார். வளர்ப்பு மகனையே மணந்து கொண்டு குழந்தைகளையும் இவர் பெற்றெடுத்தார்.

  மேலும் படிக்க
  next
 5. ஜாலியன்வாலா பாக் நினைவிடம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்

  View more on twitter

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புனரமைப்பது "தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு" என்று குற்றம்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  தியாகியின் பொருள் தெரியாத ஒருவரால் மட்டுமே இதுபோன்ற அவமதிப்பை செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திரத்திற்காக போராடாதவர்களால், அதற்காகப் போராடியவர்களைப் புரிந்து கொள்ள முடியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

  புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

  அதையொட்டி ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நிகழ்வுகள் காட்டப்படும் ஒலி மற்றும் ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோதி, வரலாற்றைப் பாதுகாப்பது நாட்டின் கடமை என்று கூறினார்.

  கடந்த கால நிகழ்வுகள் "படிப்பினையையும் முன்னேறுவதற்கான வழியையும் கொடுத்துள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

  ஜாலியன் வாலா பாக் படுகொலை என்பது என்ன?

  ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் நடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மீது அப்போதைய ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 1,100க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

  அந்த சம்பவத்தின் நினைவாக இருந்த சுவடுகளை புனரமைத்து நிர்மாணிக்கப்பட்ட புதிய நினைவிடம் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

  "தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்தவரின் மகன் என்ற முறையில் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை என்னால் சகித்துக் கொள்ள முடியாது," என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அநாகரிகமான இந்த கொடூரத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

  View more on twitter
 6. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  நேருவும் முகம்மது அலி ஜின்னாவும்

  "காந்தி ஜின்னாவை பிரதமராக்க தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: இந்திய விடுதலை தினம் - இவர்களுக்கு எது சுதந்திரம்?
 8. வுஸ்துல்லா கான்

  பிபிசி, பாகிஸ்தான்

  ஜவகர்லால் நேரு- முகமது அலி ஜின்னா

  பிரிட்டிஷாரின் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்தியா, இரு நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான் என பிரிவினைக்குள்ளாகி ஒரே நேரத்தில் விடுதலை பெற்றாலும் பாகிஸ்தானில் ஆகஸ்டு 14ம் தேதியும், இந்தியாவில் ஆகஸ்டு 15ம் தேதியும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: 1857களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட ஜான்சி ராணிக்கு துணை நின்ற விளிம்புநிலை பெண்மணி
 10. Video content

  Video caption: ராணி கெய்டின்லியு: பிரிட்டிஷாரை எதிர்த்து 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பெண்

  ராணி கெய்டின்லியு - பிரிட்ஷாரின் கட்டாய வரிவசூலுக்கு எதிராகக் குரலெழுப்பிய நாகா பெண்மணி இவர். நேரு "ராணி" என்று கொண்டாடிய பெண்மணி.

பக்கம் 1 இல் 4