கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2018

 1. இம்ரான் குரேஷி

  பிபிசி செய்தியாளர்

  பசவராஜ் பொம்மை

  2011ஆம் ஆண்டில், எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டால் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார், ஆனால் அப்போதும் கூட அவர் மத்திய தலைமையைப் புறந்தள்ளி, தனக்கு ஆதரவான சதானந்த கௌவுடாவை முதல்வராக்கினார். பின்னர் கௌடா மத்திய அமைச்சராகவும் ஆனார்.

  மேலும் படிக்க
  next
 2. கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா

  எடியூரப்பா
  Image caption: கோப்புப்படம்

  கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்படட்ட நிகழ்வில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

  பெங்களூருவில் உள்ள விதான் செளதா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, "முதல்வர் பதவியில் நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்," என்றார்.

  "மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்," என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசினார்.

  இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் தமது முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகுவார் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக தமது மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்க எடியூரப்பா முயல்வதாகவும் மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தன.

  இது தொடர்பான பின்னணி தகவல்களை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 3. ஷில்பா ஷெட்டி கணவர்

  வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அழைத்து, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக புகார் அளித்தார்

  மேலும் படிக்க
  next
 4. மேகேதாட்டு அணை பிரச்னை: புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தும் விழுப்புரம் எம்.பி

  CAUVERY TAMIL NADU KARNATAKA
  Image caption: புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் மனு அளிக்கும் ரவிக்குமார், எம்.பி

  கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் அணை கட்டும் அந்த மாநில அரசின் முயற்சியை தடுக்க, தமிழக வழியில் புதுச்சேரி அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நினைவேற்ற வேண்டும் என்று அதன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் வலியுறுத்தியிருக்கிறார் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.

  இது தொடர்பாக அவர் அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் மனு அளித்துள்ளார். அதன் விவரம்:

  "புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத்தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது.

  புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது. இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத்தான் நம்பியுள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.

  காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நம்பியார், புதுச்சேரிக்கு 9 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என வாதாடினார். ஆனால் நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி தண்ணீரைத்தான் உச்சநீதிமன்றமும் ஒதுக்கியது .

  நடுவர் மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் இரண்டாம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதிசெய்தது. புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையை கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடிசெய்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டிஎம்சி நீரை தமிழ்நாட்டின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  தற்போது காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்னாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது. அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். மேகேதாட்டு அணையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர 12.07.2021 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

  புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். எனவே சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காவிரிநீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்,” என ரவிக்குமார் மனுவில் கூறியுள்ளார்.

  இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசித்து விட்டு முடிவெடுப்பதாக தன்னிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

 5. மேகேதாட்டு விவகாரம்: தமிழக அனுமதி தேவையில்லை - கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

  காவிரி
  Image caption: டாக்டர் டி.கே. சிவகுமார், கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

  கர்நாடகா அரசு அமல்படுத்தவிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார்.

  காவிரியில் மேகேதாட்டு அணை திட்டத்தை ரூ. 9000 கோடி மதிப்பில் செயல்படுத்த கர்நாடகா அரசு உத்தேசித்துள்ளது.

  பெங்களூர் நகருக்கு சீரான குடிநீர் விநியோகம், 400 மெகா வாட் மின்சாரத்தை உறுதிப்படுத்தும் மின்சார தயாரிப்பு திட்டம் ஆகியவை இந்த மேகேதாட்டு அணை திட்டத்தின் நோக்கம்.

  2017இல் இந்த திட்டத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த மாநில அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை பெற அங்கு ஆய்வு செய்ய மத்திய அரசை கர்நாடகா அரசு வற்புறுத்தி வருகிறது.

  இந்த நிலையில், க‌டந்த ஜூன் 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, ‘கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது' என வலியுறுத்தினார். கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

  இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செவ்வாய்க்கிழமை இந்திய நீர்ப்பானத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திப்பதற்காக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி வந்துள்ளார்.

  இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார், தமது ட்விட்டர் பக்கத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

  அதில், நீர் ஆதாரம் கொண்ட மாநிலம், அந்த நதி நீர் பாய்ந்தோடும் மாநிலத்தில், தனது திட்டங்களுக்காக அனுமதி பெறத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது.

  எனவே, கர்நாடகா முதல்வர், தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது சரியானதல்ல. கர்நாடகா முதல்வரிடம் அரசியல் நலன்கள் தெளிவற்று உள்ளதன் பிரதிபலிப்பே இது என்று அவர் கூறியுள்ளார்.

  முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

  அதில், 400 மெகாவாட் மின்சாரம், 4.75 டிஎம்சி குடிநீர் தேவைக்காகவே கர்நாடக அரசு மேகேதாட்டு கூட்டு குடிநீர் மற்றும் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  இதனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதில் எவ்வித தடங்கலும் ஏற்படாது. காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளுக்கு இந்த திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இத் திட்டம் இரு மாநில மக்களுக்கும் நலனையே பயக்கும். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

  கர்நாடக அரசு அதை எதிர் கொண்டு வரும் நிலையில், இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

  அதே வேளையில் தமிழக அரசு காவிரி படுகையில் குந்தா, சில்லஹள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் தயாரிப்பதற்காக இரு நீர் மின் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. குந்தா நீர் மின் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த 12.2.2021 அன்று ஏற்றுக்கொண்டுள்ளது.

  சில்லஹள்ளி நீர் மின் திட்டமானது நிபுணர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதுதவிர தமிழகஅரசு மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர காவிரிபடுகை பகுதிகளிலும் மேலும் சிலதிட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

  இந்த சூழலில் நான் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நல்ல‌ உறவை மேம்படுத்த விரும்புகிறேன். இதை தமிழக அரசு நல்ல முறையில் பரிசீலித்து, மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரங்களுக்கு தீர்வுகாணும் வகையில் இருமாநில அதிகாரிகளையும் உள்ளடக்கி பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்," என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

  View more on twitter
  View more on twitter
 6. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல் - யார் இந்த ஏ. ராஜா?

  தோட்டத் தொழிலாளர்களான அந்தோணி லக்ஷ்மன் - ஈஸ்வரி தம்பதிக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜா மகனாக பிறந்தார். கேரள சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 7. தமிழக அரசியல்

  தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர்கள் அளித்த அறிக்கைகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. கர்நாடகத்தில் வாக்கெடுப்பு

  பாஜகவுக்கு கர்நாடக சட்டமன்றத்தில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு சுயேச்சையின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. பி.எஸ்.எடியூரப்பா

  கர்நாடகா மாநிலத்தின் 25வது முதலமைச்சராக பி.எஸ் எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்கள் எடியூரப்பாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

  மேலும் படிக்க
  next
 10. எஸ்.வி. ரமணி

  முன்னாள் ஒருங்கிணைப்பாளர், காங்கிரஸ் ஊடகப் பிரிவு

  கா்நாடக அரசியல்: காங்கிரஸ் அரசு வீழ என்ன காரணம்?

  கடந்த ஆறு மாதங்களாகவே பா.ஜ.க. இந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது தெரிந்தவுடன், என்ன பிரச்சனைகள் வரலாம், யார் யாரெல்லாம் செல்லக்கூடியவர்கள் என்பதைக் கண்டுபிடித்து காங்கிரஸ் சரிசெய்திருக்கலாம். வாக்குறுதிகளும் கொடுத்திருக்கலாம். அதைச் செய்ய காங்கிரஸ் தவறவிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2