ராம் நாத் கோவிந்த்

 1. ராம்நாத் கோவிந்த்

  பெருந்தொற்றின் வீரியம் குறைந்திருந்தாலும், நம்மை விட்டு கொரோனா முழுமையாக சென்று விடவில்லை. இந்த ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்ற கொரோனா பெருந்தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து நாம் வெளியேவரவில்லை என்று கூறியுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

  மேலும் படிக்க
  next
 2. கருணாநிதி பட திறப்பு

  `ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டப்பேரவை சிறப்பான அமைப்பாக உள்ளது" என குறிப்பிட்ட இந்திய குடியரசு தலைவர், பாரதியின் `வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்ற வரிகளை தமிழில் மேற்கோள் காட்டினார்.

  மேலும் படிக்க
  next
 3. தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்

  கருணாநிதி
  Image caption: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

  தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று மாலை தொடங்கியது.இதையொட்டி சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

  முன்னதாக, பேரவை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேரவை சபாநாயகர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரி லால் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

  இவர்களைத் தொடர்ந்து குடியரசு தலைவர் சிறப்புரையாற்றினார்.

  View more on twitter
 4. சென்னை வந்த குடியரசு தலைவரை வரவேற்றார் மு.க. ஸ்டாலின்

  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் ஸ்டாலின்
  Image caption: சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

  சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் வரவேற்றார். இன்று மாலை தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கவிருக்கும் ராம்நாத் கோவிந்த் பேரவை நிகழ்விலும் உரையாற்றவிருக்கிறார்.

  பின்னர் நீலகிரி செல்லும் அவர், அங்குள்ள ஆளுநர் ஓய்வு மாளிகையில் சில தினங்கள் தங்கி விட்டு டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.

 5. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2-6வரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம்

  ராம்நாத் கோவிந்த்
  Image caption: ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசு தலைவர்

  தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பேரவைக்குள் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்களில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி சென்னைக்கு வரும் 2ஆம் தேதி நண்பகலில் வரும் அவர், மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை நிகழ்ச்சியில ்கலந்து கொண்டு கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பேரவையிலும் குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி செல்கிறார். அங்குள்ள மாநில ஆளுநரின் விருந்தினர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர், புதன்கிழமை காலை 10 மணியளவில் வெலிங்டன் பாதுகாப்பு கல்லூரிக்கு சென்று ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நீலகிரியில் ஆகஸ்ட் 3,4,5,6 ஆகிய நாட்களில் தங்கும் குடியரசு தலைவர், ஆகஸ்ட் 6ஆம் தேதி வியாழக்கிழமை காலையில், நீலகிரியில் இருந்து கோவைக்கு சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் திரும்புகிறார்.

 6. தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் கருணாநிதி படம் திறப்பு - சபாநாயகர்

  அப்பாவு
  Image caption: அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர்

  தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளதாக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்பேரவை நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுவர்," என்று தெரிவித்தார்.

 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஸ்டாலின்

  இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருக்கு மதுரை குறித்த 'Multiple Facets of My Madurai' என்ற புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். மனோகர் தேவதாஸின் இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?

  மேலும் படிக்க
  next
 8. மோதி

  பிரதமர் மோதியின் அமைச்சரவையில் அவர் நீங்கலாக 30 கேபினட் அமைச்சர்கள், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. அமைச்சர்கள் கூட்டத்தை திடீரென ரத்து செய்தார் மோதி

  MODI
  Image caption: நரேந்திர மோதி, இந்திய பிரதமர்

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

  இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்திறன், மத்திய அரசின் திட்டங்களின் அமலாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவிருந்தது.

  இதனால், பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளன.

 10. இந்தியாவில் 4 மாநில ஆளுநர்கள் இடமாற்றம், 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

  INDIA PRESIDENT
  Image caption: ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசு தலைவர்

  இந்தியாவில் நான்கு மாநிலங்களின் ஆளுநர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.

  இதன்படி மிசோரம் மாநில ஆளுநர், கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  ஹரியாணா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  திரிபுரா ஆளுநர் ரமேஷ் பய்ஸ் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும், ஹிமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  புதிய ஆளுநர்கள்: கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி, மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல், ஹிமாச்சல பிரதேச மாநில ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இதில் கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தாவர்சந்த் கெலாட், பிரதமர் மோதியின் மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருந்து வருகிறார்.

  பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை ஒரு சில நாட்களில் விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி வரும் வேளையில், இந்த ஆளுநர்களின் மாற்றங்களும் புதிய நியமனங்களும் வந்துள்ளதால், இந்த அரசியல் நிகழ்வு, உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

பக்கம் 1 இல் 2