நாடாளுமன்றம்

 1. இந்திய நாடாளுமன்ற புதிய கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட்ட நரேந்திர மோதி

  நரேந்திர மோதி
  Image caption: நாடாளுமன்ற கட்டட கட்டுமான பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

  அமெரிக்காவுக்கு ஐந்து நாட்கள் பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று டெல்லி திரும்பிய நிலையில், இன்று இரவு அவர் நாடாளுமன்ற புதிய கட்டட கட்டுமானப் பணிகளின் நிலையை நேரில் பார்வையிட்டார்.

  இது தொடர்பான படங்களை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

  நரேந்திர மோதி
  நரேந்திர மோதி
  நரேந்திர மோதி
 2. வந்துகொண்டிருக்கும் செய்திபுதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது பாஜக

  நடராஜன் சுந்தர், புதுச்சேரி

  மாநிலங்களவை தேர்தல் புதுச்சேரி
  Image caption: செல்வகணபதி

  புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளராகும் வாய்ப்பை யாருக்கு தருவது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.

  இந்த நிலையில் அந்த வாய்ப்பை பாஜகவிற்கே என்.ஆர். காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு மத்தியில் ஆளும் பாஜக கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

  பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதி, அக்கட்சியின் பொருளாளருமாக இருப்பவர. முன்னாள் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

  கட்சி மேலிட அறிவிப்பைத் தொடர்ந்து நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இதில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.

  ஏனெனில் என்.ஆர்.காங்கிரசிடம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகள் 3 பேரும் உள்ளனர்.

  எனவே ஆளும் கூட்டணி எளிதாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.

  புதுச்சேரி
 3. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இந்தியா

  இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில வாரங்களிலேயே பொறியியல் கல்லூரியில் சேர விரும்பிய மாணவர் ஒருவரும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய மாணவி ஒருவரும் இந்த இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். கம்யூனல் ஜி.ஓவால் தங்களுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் முறையிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 4. மாநிலங்களவைக்கு திமுக சார்பில் எம் எம் அப்துல்லா போட்டி

  எம் எம் அப்துல்லா

  வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் அப்துல்லா போட்டியிடுவார் என மு க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம் எம் அப்துல்லா வெளிநாடு வாழ் தமிழர் நல அணியில் இணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 5. தமிழக எம்.பி.க்கள் கடிதம்: ஆங்கிலத்திலேயே பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  எம்.பிக்கள் ஆங்கில மொழியில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அனுப்புமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "தமிழ்நாட்டில் எம்.பி.கள் ஆங்கிலத்தில் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கில மொழிகளிலேயே பதில் அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பான சட்ட நடைமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளது.

  முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு, மனுதாரருக்கு ஹிந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டதால் அந்த செயல், விதியை மீறுவதாக கருதக்கூடாது என குறிப்பிடப்பட்டது.

  இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

  என்ன வழக்கு?

  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் காவல் படை பணிக்கு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. அதில், வட மாநிலங்களில் 5, தென் மாநிலங்களில் 2, கிழக்கு மாநிலங்களில் தலா ஒ இடமும் தேர்வு எழுதும் மையங்கள் உள்ள இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

  தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மையங்கள் இல்லை. இதனால், புதுச்சேரியில் மையம் அமைக்குமாறு மத்திய உள்துறைக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

  அவருக்கு ஹிந்தி மொழியில் உள்துறை இணை அமைச்சர் பதில் அனுப்பினார். அதன் உள்ளடக்கத்தை அறிய முடியாததால் மீண்டும் இணை அமைச்சருக்கு வெங்கடேசன் கடிதம் எழுதி, அந்த கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு ஆங்கில மொழியில் பதில் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

  ஆனால் அரசு தரப்பிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

  நீதித்துறை
  Image caption: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
  View more on twitter
 6. தாலிபன்களுக்கு ஆதரவாக பேசிய எம்.பி மீது தேச துரோக வழக்கு: உத்தர பிரதேச அரசு நடவடிக்கை

  இந்தியா நாடாளுமன்றம்
  Image caption: ஷஃபிகுர் ரஹ்மான் புர்கே

  ஆப்கானிஸ்தானில் ஆளுகையை கைப்பற்றிய தாலிபன்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் புர்கே மீது அம்மாநில காவல்துறையினர் தேச துரோக வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

  இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இது பற்றி சம்பால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்ரேஷ் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி சுதந்திரம் பெற்றது போல ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர் என பேசியிருந்ததாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

  அதன் பேரில் தேச துரோக சட்டப்பிரிவு உள்பட மூன்று பிரிவுகளில் ஷஃபிகுர் ரஹ்மான் புர்கே மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதேபோல, சமூக ஊடகங்களில் மேலும் இருவர் மீதும் நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம்," என்று கூறினார்.

  என்ன பேசினார் சமாஜ்வாதி கட்சி எம்பி?

  முன்னதாக, ஊடகங்களிடம் பேசி ஷபிகுர் ரஹ்மான் புர்கே, "பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பில் இந்தியா இருந்தபோது, நமது தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் போராடி சுதந்திரம் பெற்றனர்.

  அதுபோலவே இப்போது முதலில் ரஷ்யா, பிறகு அமெரிக்கா என வந்த நாடுகளிடம் இருந்து தாலிபன்கள் சுதந்திரம் பெற்றுள்ளனர். இது முற்றிலும், அவர்களின் உள்விவகாரம், அதில் தலையிடக்கூடாது," என்று தெரிவித்தார்.

  இந்த நிலையில், எம்.பியின் இந்த கருத்துக்கு உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளர்யா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமது கருத்துக்காக சமாஜ்வாதி கட்சி எம்.பி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

  முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஷஃபிகுரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

  எம்.பி விளக்கம்:

  இந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கையை அறிந்த ஷபிகுர் ரஹ்மான் புர்கே, "இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தாலிபன்களை ஒப்பிட்டு நான் பேசவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்தியக் குடிமகன். இந்திய அரசின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார் ஷபிகுர் ரஹ்மான் புர்கே.

  அப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டபோது, "இந்திய அரசியலமைப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. ஆனால், தேசிய கீதமான வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிராக உள்ளது. அதை நாங்கள் பின்பற்ற மாட்டோம்," என்று பேசியிருந்தார்.

  அவரது கருத்து சர்ச்சையானதால் அதை பின்னர் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

 7. தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம்

  தேர்தல் ஆணையம்

  தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் 14 வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 31வரை பெறப்படும்.

  யார் இந்த மொஹமதுஜான்?

  அதிமுகவைச் சேர்ந்த மொஹம்மதுஜான் (74) கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானதையடுத்து, அவர் வகித்து வந்த எம்.பி பதவிக்கான இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

  அதிமுகவில் 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை ராணிப்பேட்டை முனிசிபாலிட்டி தலைவராகவும் 2011 சட்டப்பேரவை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆகவும் ஆனார் மாஹம்மத்ஜான்.

  2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார். அவரது பதவிக்காலம் ஜூலை 24, 2025ஆம் ஆண்டு வரை இருந்தது.

  தமிழக அரசுக்கு உத்தரவு

  இந்த தேர்தலை கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  கொரோனா தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த தனி அலுவலரை நியமிக்கும்படியும் தமிழக தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  தமிழ்நாட்டில் மொஹம்மத்ஜான் மறைவைத் தொடர்ந்து ஒரு இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

  இது தவிர, அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் ஏற்கெனவே வகித்து வந்த எம்.பி பதவியை கடந்த மேத மாதம் ராஜிநாமா செய்தனர்.

  இதில் முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரையும், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் இருந்தது. மாநிலங்களவையில் தற்போது அதிமுகவுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேரும், புதுச்சேரியில் இருந்து என். கோகுலகிருஷ்ணனும் உறுப்பினர்களாக உள்ளனர்.

  இந்திய தேர்தல் ஆணையம்
 8. நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும்போது தரமான விவாதம் நடப்பதில்லை: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

  என்.வி.ரமணா
  Image caption: என்.வி.ரமணா

  நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும்போது தரமான, போதிய விவாதங்கள் நடப்பதில்லை. இதனால், இந்த சட்டங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா. இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி மூவண்ணக் கொடியேற்றும் ஒரு நிகழ்வில் பங்கேற்கும்போதுதான் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

  தரமான விவாதங்கள் இல்லாத நிலையில், நீதிமன்றங்களால் புதிய சட்டங்களின் பின்னணியில் உள்ள நோக்கங்களையும், இலக்குகளையும் புரிந்துகொள்ளமுடிவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். நடாளுமன்றத்தில் போதிய விவாதங்கள் நடத்தாமல், நிலைக்குழுக்களுக்கு விவாதிக்க அனுப்பாமல், முக்கிய சட்டங்களைக்கூட மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதாக நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைக்கும் நிலையில் தலைமை நீதிபதி ரமணா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 9. ஆகஸ்ட் 14 நேரலை நிறைவடைகிறது

  இத்துடன் சனிக்கிழமைக்கான பிபிசி தமிழின் நேரலை பக்கம் நிறைவடைகிறது.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 10. ஆகஸ்ட் 11ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  இத்துடன் புதன்கிழமைக்கான பிபிசி தமிழின் நேரலை பக்கம் நிறைவடைகிறது.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் வியாழக்கிழமை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

பக்கம் 1 இல் 11