கனடா

  1. ரோஜர் ஹர்ராபின்

    பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர்

    Wrecked car in German floods

    உலக நாடுகள் தங்களுக்குள் பொதுவாக பருவநிலைக்கான சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ கூட்டாக செலவிடவேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    மேலும் படிக்க
    next
  2. Video content

    Video caption: கனடாவில் வெப்பத்துக்கு பயந்து குளுமை பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
  3. கனடா

    "இயன்றவரை நாங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறோம். அதிக வெப்பநிலையும் வறண்ட வானிலையும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால், 47 டிகிரிக்கு கீழே உள்ள வெப்பநிலையில் வாழ்வதற்கும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையின் தாக்கத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது," என்று லைட்டனில் வாழும் குடியிருப்புவாசி கூறுகிறார்.

    மேலும் படிக்க
    next
  4. கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - டஜன் கணக்கானோர் பலி

    Canada

    கனடா நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் பதிவாகி வரும் வெப்பத்தால் டஜன் கணக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அங்கு 49.5 டிகிரிக்கும் மேலாக அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

    இதற்கு முந்தைய வாரங்களில் அதிகபட்சமாக கனடாவில் 45 டிகிரி அளவில்தான் வெப்பம் பதிவானது.

    இந்த வெப்பநிலை வயோதிகர்களுக்கும் உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் மோசமானதாக இருக்கலாம் என்று வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஜ் தெரிவித்துள்ளார்.

  5. இந்தோனீசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்கள் - மீட்கக் கோரி உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை

    கொரோனா

    இந்தோனேசீயாவில் தடுத்து வைக்கபட்டுள்ள 6 தமிழர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (32). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.

    கவின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் DEE4BRICH என்ற கப்பலில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக கப்பலில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த கவின் உட்பட 6 பேர் இந்தோனேசீயாவில் இறங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக இந்தோனேசீயா விமான நிலையம் சென்ற போது 6 பேரும் கடவுச்சீட்டு சரிபார்க்கும் மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    பின்னர் இந்தோனேசீயாவில் உள்ள பாட்டாம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், இந்தோனேசீயா அரசால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கவின் உறவினர் நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 8ம் தேதி பணிகளை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட இருப்பதாக கவின் தனது மனைவி ரேவதியிடம்; கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட தனது கணவர் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை என கவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்துள்ளது.

    உடனடியாக கவின் வேலை செய்த நிறுவனத்தை ரேவதிதொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா காரணமாக கவின்; தனிமைப்படுத்தப்பட்டு இந்தோனேசீயாவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை கவின் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலமாக மனைவி ரேவதியை தொடர்பு கொண்டு 'என்னை காப்பாற்றுங்கள், முகாமில் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்கிறார்கள்' என பேசிக் கொண்டிருந்த போது சிறை அதிகாரி ஒருவர் கவினிடம் இருந்த செல்போனை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் அச்சம் அடைந்த கவினின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கவினை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் கவினின் உறவினர் நாகராஜன்.

  6. Children's shoes are placed at the base of a statue in Toronto

    1863 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பூர்வகுடி குழந்தைகள் தங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இத்தகைய கட்டாய உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் படிக்க
    next
  7. சித்தரிப்புப் படம். படகு.

    தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் படிக்க
    next
  8. ஜி7 மாநாட்டில் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து முக்கிய பேச்சு

    பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர், பிரிட்டனில் நடைபெறும் இந்த மூன்று நாள் சந்திப்பில் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இது.

    மேலும் படிக்க
    next
  9. கனடாவில் முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்த தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

    ஜஸ்டின் ட்ரூடோ

    கனடாவில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது டிரக்கை மோதச்செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் இறந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மதிஹா சல்மான் (44), சல்மான் அஃப்சல் (46), யாம்னா அஃப்சல் (15), அஃப்சலின் 74 வயது தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

    அவர்கள் மோதிக் கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நடந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என்று கண்டித்தார்.

    இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, இது இந்த நாட்டில் வெறுப்புணர்வுக்கோ இனவாத போக்குக்கோ இடமில்லை என கருதுவோர் உண்டென்றால், பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்து எப்படி என்னால் அதை தெரிவிக்க முடியும்? இஸ்லாமோஃபோபியா என்பது உண்மையில்லை என்பதை எப்படி அந்த சிறாரின் குடும்பத்தினரின் கண்களை பார்த்து என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

    கொரோனா பெருந்தொற்றால் மாதக்கணக்கில் வீடுகளிலேயே முடங்கிக் கடந்த கனடா மக்களுக்கு தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து தூய்மையான காற்றை சுவாசித்தபடி நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், குடியேறி முஸ்லிம் குடும்பத்தை இலக்கு வைத்து டிரக் மோதி நடந்த தாக்குதல் கனடாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

    View more on twitter
  10. அதிபர்

    உலகம், தேசிய அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    மேலும் படிக்க
    next
பக்கம் 1 இல் 6