வட அமெரிக்கா

 1. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவது விஷ்ணுபு்ரியா, மணிகண்டன், பரணிதரன்நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்

 2. பால் ரின்கன்

  அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் இணையதளம்

  Footprint at White Sands

  முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்துக்குள் காலடி எடுத்துவைத்திருக்கலாம் என்று தற்போது அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

  எங்களுடன் இன்றைய நாளில் இந்த பக்கத்தில் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 4. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இன்றைய நாளில் இந்த பக்கத்தில் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 5. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலை தகவல்களை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 6. தாலிபன் தலைவருடன் சிஐஏ இயக்குநர் ரகசிய சந்திப்பு

  ஆப்கன் தாலிபன்
  Image caption: வில்லியம் ஜே. பர்ன்ஸ், சிஐஏ இயக்குநர்

  அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பர்ன்ஸ் தாலிபன் தலைவர் அப்துல் கனி பராதரை காபூலில் ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

  அந்த செய்தியின்படி, ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றிய பிறகு இரு தரப்பு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டுள்ளது.

  பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமானோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்திருக்கும் வேளையில் தமது உளவு அமைப்பின் தலைவரை தாலிபன் தலைவரிடம் பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த சந்திப்பு பற்றி தாலிபன் தரப்பு இன்னும் அலுவல்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப்படைகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 காலக்கெடு தொடர்பாக இரு தரப்பும் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  View more on twitter
 7. ரோஜர் ஹர்ராபின்

  பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர்

  Wrecked car in German floods

  உலக நாடுகள் தங்களுக்குள் பொதுவாக பருவநிலைக்கான சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவ கூட்டாக செலவிடவேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  மேலும் படிக்க
  next
 8. இந்தோனீசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்கள் - மீட்கக் கோரி உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை

  கொரோனா

  இந்தோனேசீயாவில் தடுத்து வைக்கபட்டுள்ள 6 தமிழர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (32). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.

  கவின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் DEE4BRICH என்ற கப்பலில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக கப்பலில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த கவின் உட்பட 6 பேர் இந்தோனேசீயாவில் இறங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக இந்தோனேசீயா விமான நிலையம் சென்ற போது 6 பேரும் கடவுச்சீட்டு சரிபார்க்கும் மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

  பின்னர் இந்தோனேசீயாவில் உள்ள பாட்டாம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

  இந்த நிலையில், இந்தோனேசீயா அரசால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது குறித்து கவின் உறவினர் நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 8ம் தேதி பணிகளை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட இருப்பதாக கவின் தனது மனைவி ரேவதியிடம்; கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட தனது கணவர் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை என கவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்துள்ளது.

  உடனடியாக கவின் வேலை செய்த நிறுவனத்தை ரேவதிதொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா காரணமாக கவின்; தனிமைப்படுத்தப்பட்டு இந்தோனேசீயாவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் நேற்று மாலை கவின் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலமாக மனைவி ரேவதியை தொடர்பு கொண்டு 'என்னை காப்பாற்றுங்கள், முகாமில் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்கிறார்கள்' என பேசிக் கொண்டிருந்த போது சிறை அதிகாரி ஒருவர் கவினிடம் இருந்த செல்போனை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதனால் அச்சம் அடைந்த கவினின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கவினை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் கவினின் உறவினர் நாகராஜன்.

 9. வடகொரியா

  கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய ஏவுகணையின் அசாத்திய தோற்றம் வட கொரிய விவகாரங்களைத் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: தோற்றதற்கு என்ன காரணம்? ஒரு விரிவான அலசல்

  தோற்றதற்கு என்ன காரணம்? ஒரு விரிவான அலசல்

பக்கம் 1 இல் 4