இலங்கை

 1. ஹிப்போ ஸ்பிரிட் கப்பல்

  இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட சீன செயற்கை விவசாய உரத்தை ஏற்றிய கப்பலான ஹிப்போ ஸ்பிரிட் (HIPPO SPIRIT) கப்பல், தற்போது சிங்கப்பூர் நோக்கி பயணித்து வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 2. பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு அறிவிப்பு

  பாகிஸ்தான் சியால்கோட் நகரில் சித்திரவதைக்குட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்றிரவு அனுமதி வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

  நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பிரியந்த குமார தியவடன கடந்த 11 வருடங்களாக ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  பிரியந்த குமார தியவடனவின் குடும்ப நலன்புரி விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

  மேலும், பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.

  பிரியந்தவின் மனைவி நிரோஷி தசநாயக்க
 3. Video content

  Video caption: இலங்கையில் மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலை இழிவாக இருப்பதாக ஐ.நா அலுவலர் கவலை

  இலங்கையின் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற, இழிவான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரோமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.

 4. புதன்கிழமை பிரியந்த பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியை

  உடல்

  பாகிஸ்தானில் சித்திரவதைக்குட்படுத்தி, எரியூட்டி கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் உடல், இன்று மாலை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவரது உடலை ஏற்றிய யூஎல் 186 ஸ்ரீலங்கன் விமானம் இன்று மாலை 5 மணியளவில் வந்தடைந்தது.இலங்கை அரசாங்கத்தின் செலவில், அன்னாரது உடல் பாகங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.பிரியந்த குமாரவின் உடலை பொறுப்பேற்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் மாத்திரமன்றி, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.இவ்வாறு கொண்டு வரப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனைகளின் பின்னர், உடல் பாகங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, பிரியந்த குமார தியவடனவின் உடல், அவரது கனேமுல்ல பகுதியிலுள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.இவ்வாறான நிலையில், பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகளை, எதிர்வரும் புதன்கிழமை (08) நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 5. The body of Priyantha Kumara who was killed in Pakistan is being brought today

  பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் உடல் எச்சங்கள் இன்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

  மேலும் படிக்க
  next
 6. பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு

  பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடனவின் உடல் எச்சங்கள் இன்று நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்படவுள்ளது.

  இந்த விமானம் பாகிஸ்தான் நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

  விரிவாக: பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு

  பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு
 7. Video content

  Video caption: பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்த குமார தியவடன எரிக்கப்பட்டது ஏன்?

  பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

 8. மலையக தமிழர்

  இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், மலையகத்திலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆண்டொன்றிற்கு சுமார் 1.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை இந்த பெருந்தோட்ட துறை மூலம் வருகின்றது.

  மேலும் படிக்க
  next
 9. பாகிஸ்தான் கும்பலால் எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையர் பிரியந்த குமார தியவடன

  பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். பிரியந்த குமார தியவடனவின் உடல் மிகவும் மோசமாக எரிந்து போயிருந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 10. மின்சார விநியோகம் தடை

  நாட்டில் கடந்த சில வாரங்களாகவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், பிரதான எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தனது விநியோகத்தை இடைநிறுத்தியது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 100