யூடியூப்

 1. கூகுள் இணையதளம்

  Googol என்பது எண் 1-ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் இருப்பதை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு கணித சொற்கூறு ஆகும். உண்மையில் Googol என்று தான் பெயர் வைக்க நினைத்துள்ளனர். ஆனால், தவறான எழுத்துப்பிழையால் அது 'Google' ஆகிவிட்டது.

  மேலும் படிக்க
  next
 2. கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்

  கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை தங்கள் இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.

  கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

  கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.

  கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்
 3. Video content

  Video caption: ரித்து ராக்ஸ் ரித்விக்: இளம் வயதிலேயே இணையத்தை கலக்கும் சுட்டி யூடியூப் ஸ்டார்.

  என் பெயர் ரித்விக், என் யூடியூப் சேனலின் பெயர் ரித்து ராக்ஸ். இளம் வயதிலேயே ஆண், பெண் என வரிசை கட்டி வேடம் போட்டு இணையத்தை கலக்கி வருகிறார் இந்த சுட்டி ஸ்டார்.

 4. யூ டியூப் மதன் கைது - என்ன சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள்

  ஏ.எம். சுதாகர், பிபிசி தமிழுக்காக

  யூ டியூப் மதன் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் போலீசார் மதனை சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கப் போவதாக சேலத்தில்தகவல் பரவியது.

  இதை தொடர்ந்து சேலத்தில் உள்ள மதன் வீட்டு முன்பு சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். மதன் கைது தொடர்பாக நாம் உள்ளூர் மக்களிடம் பேசினோம்.

  அங்கிருந்த கல்லூரி மாணவன் ஐயப்பன் கூறுகையில், “மதன் மேலுள்ள பாசத்தால்தான் பப்ஜி கேம் விளையாட ஆரம்பித்தேன். நான் காலேஜ் படிக்கும் நிலையில் மனதளவில் சோர்வாக உணர்வேன். அப்போது அவருடைய வார்த்தைதான் எனக்கு புத்துரணர்வாக இருக்கும். நிறைய புத்திமதி சொல்வார். அதோடு அவர் நிறைய மாணவர்களுக்கு கல்லூரி படிப்புக்கான பணம் கட்டி உதவி செய்து இருக்கிறார். அரசாங்கத்திடமும், போலீசாரிடமும் ஒரு வேண்டுகோள்… மதனை விட்டு விடுங்கள் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு நாங்கள் கடைசிவரை ஆதரவு தருவோம். நாங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று கூட நினைத்தோம். ஆனால் கொரோனா காரணமாக அதைகைவிட்டு விட்டோம்” என்றார்.

  பின்னர் போலீசார் மதனை சேலம் அழைத்து வரவில்லை என்பதால் அனைவரும்கலைந்து சென்றனர்

  அப்போது பெற்றோர் சிலர் அங்கு வந்து மதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

  மதன் வீட்டின் அருகே குடியிருக்கும் விமலா என்பவரிடம் பேசினோம். “இந்தப் பசங்க நாலு மணி நேரம்5 மணி நேரம் ஏன் நாள் முழுவதுமே விளையாடுகிறார்கள். இங்கே உள்ளவர்கள் எப்போதாவது ஒரு முறை தான் மதனை பார்த்திருக்கிறார்கள். நான்கூட ஜனவரி மாதம் ஒரு முறை அவரை பார்த்து இருக்கிறேன். அந்தப் பெண்ணை மதனின் மனைவி என்கிறார்கள் காதலி என்கிறார்கள் தற்போது குழந்தை பிறந்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்தபெண் எப்போதும் வீட்டுக்குள் தான் இருப்பார் கல்லூரிக்கு போவார் வருவார் மற்றபடி இருக்கிற இடமே தெரியாது. அந்த பெண் இப்படி செய்வார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அந்த கேமை தடை செய்தது போல யூடியூபில் உள்ள மதன் போட்ட அவ்வளவு வீடியோக்களையும் தடை செய்ய வேண்டும்” என்றார்

  ஐயப்பன்
  Image caption: ஐயப்பன்
  விமலா
  Image caption: விமலா
 5. மதன்

  மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 6. டாக்சிக் மதன் 18 பிளஸ்

  ஆபாச வார்த்தைகளுடன் மதன் பேசிவந்த 'டாக்சிக் மதன் 18+' என்ற யூடியூப் சேனலின் நிர்வாகியாக அவரது மனைவியே இருந்துவந்ததை காவல்துறையினர் அறிந்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. டாக்சிக் மதன் 18 பிளஸ்

  இவருடைய யூடியூப் சேனலைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானவர்கள் பதின் பருவத்தைச் சேர்ந்த இளைஞர்களாகவே இருந்தனர். குறிப்பாக 13 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே இவரைப் பெரிதும் பின்தொடர்ந்துவந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: யூடியூப் மூலம் சம்பாதித்து சொந்த வீட்டைக் கட்டி முடித்த பாகிஸ்தான் கிராமத்துப் பெண்

  யூடியூப் மூலம் சம்பாதித்து சொந்த வீட்டைக் கட்டியிருக்கிறார் பாகிஸ்தானின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்

 9. Video content

  Video caption: நான் ஒரு பெண் கால்பந்தாட்ட ரசிகை என்பதால் என்னை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தார்கள்.

  கால்பந்தாட்டம் குறித்து பெண் ரசிகைகள் நடத்தும் யூடியூப் சேனல், பாலியல் ரீதியாகவும் இனரீதியாகவும் அச்சுறுத்தி தொந்தரவு செய்யும் நெட்டிசன்கள்.

 10. Video content

  Video caption: ஏ படங்களை பார்க்க கட்டுப்பாடு - புதிய விதிகளை வகுத்த இந்திய அரசு
பக்கம் 1 இல் 4