விலங்குகள் நல உரிமை

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  விலங்குகள் கொரோனா

  செல்லப் பிராணிகள், விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ''இந்தியாவில் மனிதர்களுக்கான கொரோனா தடுப்பூசியில் மட்டும் ஆர்வம் காட்டப்படுவதால் விலங்குகளின் நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 2. குள்ளமான குட்டிப்பசு

  வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சரிகிராமில் இருக்கும் பண்ணை ஒன்றில் வளரும் ராணியை காண, கொரோனா ஊரடங்கு நேரத்திலும் 15,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 3. நிக் ஹாலாண்ட்

  பீபிள் சேவிங் தி வேர்ல்ட், பிபிசி உலக சேவை

  நஜின்

  நஜின் மற்றும் ஃபடு இரண்டுமே வேலியால் அடைக்கப்பட்ட இடம் ஒன்றில்தான் தூங்கும். ஆனால், காலையில் ஜேம்ஸ் அவற்றை திறந்த வெளியில் ஓய்வெடுக்கவும், புல்மேயவும் விடுவார்.

  மேலும் படிக்க
  next
 4. வண்டலூர்: சிங்கங்களைத் தொடர்ந்து யானைகளுக்கும் பரிசோதனை - ஆய்வு முடிவுகள் வெளியீடு

  zoo

  சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் மற்றும் வெள்ளைப் புலிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகளை பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.

  அங்குள்ள உயிரினங்களை பராமரிப்பதற்கான ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்காக பூங்காவில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது.

  இந்நிலையில், உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.

  இதனால் அதிர்ச்சியடைந்த பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள், மற்ற சிங்கங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பணிகள் நடந்தன. அப்படியும் கடந்த 16 ஆம் தேதி ஆண் சிங்கம் ஒன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தது.

  இதனால் இதர விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக இரண்டு பெண் யானைகள் மற்றும் வெள்ளைப் புலி ஒன்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது. இதன் முடிவுகள் கடந்த 25 ஆம் தேதி கிடைத்துள்ளன.

  இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவின் துணை இயக்குநர் நாக சதீஷ் கிடிஜாலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `உயிரியல் பூங்காவில் பிரகுர்தி, ரோகிணி என்ற இரண்டு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் துதிக்கை மற்றும் மலப்புழையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கடந்த 18 ஆம் தேதி போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு (ICAR-NIHSAD) அனுப்பப்பட்டது.

  இதைத்தொடர்ந்து 16 வயதுடைய பீஷ்மர் என்ற வெள்ளைப் புலியின் மாதிரியும் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வெளியான சோதனை முடிவுகளின்படி சார்ஸ் கோவிட் -2 தொற்று இல்லை இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது,' எனத் தெரிவித்துள்ளார்.

  zoo
 5. டாஸ்மேனியன் டெவில்கள்

  விலங்குகளின் பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளைப் பராமரிக்கும் ஐ.யூ.சி.என் ரெட் லிஸ்டால், டாஸ்மேனியன் டெவில் ஆபத்தான உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, கடந்த மாதம் டாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முனைவர் வோஹ்லர் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: அழியும் ஆபத்தில் உள்ள சிறுத்தை இனத்தை காக்க புதிய முயற்சி
 7. Video content

  Video caption: மனிதனை போல கத்தும் பாம்பு - உண்மையில் பாம்புகள் இப்படி சத்தமிடுமா?

  பாம்பு ஒன்று மனிதனைப் போல கத்தும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 8. ஸ்ரீநிவாஸ் லக்கோஜு

  பிபிசி-க்காக

  கழுதை

  ஆந்திராவின் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், கர்னூல், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகா, ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் கழுதைப் பால் மற்றும் இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. தாய்லாந்து கடற்படை வீரர்கள்

  செவ்வாயன்று, ஃபாமான்சின் நாவா 10 என்ற அந்த மீன்பிடி படகில் தீப்பிடித்து எரிந்து மூழ்க தொடங்கியது. தாய்லாந்தின் கோ அடாங் என்ற தீவிலிருந்து 13 கிமீ தூரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தை ஆய்வு செய்ய கடற்படையினர் வந்தபோது, அந்த நான்கு பூனைகள் மரத்துண்டு ஒன்றில் தடுமாறி நின்று கொண்டிருந்ததைக் கண்டனர்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: யானைகளை காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் `செல்ஃபி`

  யானைகளை காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் `செல்ஃபி`

பக்கம் 1 இல் 6