டென்னிஸ்

 1. எம்மா ரடுகானு

  எம்மா ரடுகானுவுக்கு முன், வெர்ஜீனியா வேட் தான் 1968ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 2. லேலா Vs எம்மா: இளம்வயதினர் மோதப் போகும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டி

  லேலா ஃபர்னாண்டஸ்
  Image caption: லேலா ஃபர்னாண்டஸ்

  நியூயார்க் நகரத்தில் நடந்து வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி நாளை (12 செப்டம்பர் 2021, ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 1.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

  அதில் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான எம்மா ரடுகனுவும், கனடாவைச் சேர்ந்த 19 வயதான லேலா ஃபர்னாண்டஸும் மோதவிருக்கிறார்கள். ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரராக இருந்த தந்தைக்கும் ஃபிலிப்பைன்ஸ் வம்சாவளியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர் லேலா. அவரின் அதிவேக இடது கை சர்வ்களை வர்ணனையாளர்கள் உச்சி முகர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

  5 அடி 6 அங்குளம் (168 சென்டி மீட்டர்) உயரமுள்ள இவர், முன்னாள் சாம்பியன் நயோமி ஒசாகாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 73ஆவது இடத்தில் இருந்த லேலா, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருந்த ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் 5ஆவது இடத்தில் இருந்த எலினா ஸ்விடோலினா ஆகியோரையும் தோற்கடித்துள்ளார்.

  லேலா ஃபர்னாண்டஸ் அமெரிக்க ஒப்பன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதை வாழ்த்தி, “அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு கனடியர் விளையாடவிருக்கிறார்” என கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட் செய்துள்ளார். ப்ரூக்ளின் நெட்ஸ் என்பிஏ கூடைப்பந்து அணியின் பிரபல பயிற்றுநர் ஸ்டீவ் நாஷ், கடந்த வாரம் லேலாவின் ஆட்டத்தைக் காண வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்டீவ் நாஷ் தன் ஆட்டத்தைக் காண வந்தது, தனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது என தன் அரை இறுதி போட்டிக்குப் பிறகு கூறினார் லேலா. லேலாவுக்கு பயிற்சியளித்த அவரது தந்தை கனடாவில் தன் இளைய மகளோடு இருக்கிறார், அவரது தாய் தான் அமெரிக்க ஓப்பன் தொடருக்கு உடன் வந்திருக்கிறார்.

  “என் அம்மா என்னோடு இருப்பது என் அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். அவர் என்னை எப்போதும் ஊக்குவிப்பார், எப்போதும் என்னோடு மகிழ்ச்சியாக இருப்பார்” என்று கூறியுள்ளார் லேலா. “எல்லாமே எங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார் லேலா.

  19 வயதான லேலா அமெரிக்க ஓப்பன் தொடரில் விளையாடுவதற்கு முன் வென்ற மிகப் பெரிய போட்டியே மான்ட்ரே ஓப்பன் தொடர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை ஆட்டக்காரரான லேலா, வலது கை ஆட்டக்காரரான எம்மா ரடுகனுவை எதிர்கொள்ளவிருக்கிறார். டென்னிஸ் உலகத்தில் 150ஆவது இடத்தில் இருந்த ஒரு வீரரும், 73ஆவது இடத்தில் இருந்த மற்றொரு வீரரும் அமெரிக்க ஒப்பன் போன்ற மிகப் பெரிய மற்றும் முக்கியமான தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

 3. Emma Raducanu

  ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மிக இளைய வீரர் என்ற புகழைப் பெற்றுள்ளார் எம்மா ரடுகானு.

  மேலும் படிக்க
  next
 4. பவானி தேவி

  இந்திய வீரர்கள் இன்று ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து தோல்வியடைந்து போட்டிகளில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

  மேலும் படிக்க
  next
 5. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி

  டோக்யோ ஒலிம்பிக் 2020

  ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

  கொல்கத்தாவைச் சேர்ந்த 25 வயது வீராங்கனையான சுதிர்தா முகர்ஜி, ஸ்வீடன் வீராங்கனை லிண்டா பெர்க்ஸ்ட்ரோமுடன் விளையாடினார். முதல் ரவுண்டில் 11க்கு 5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தபோதும் அடுத்து நடந்த ஆட்டத்தில் இழந்த இடத்தை பிடிக்க கடுமையாக முயன்றார்.

  இதைத்தொடர்ந்து, 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் சுதிர்தா. இதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.

  இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

  இதற்கிடையே, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிகா பாத்ரா, ஷரத் கமல் இணை தோல்வி அடைந்தது. இந்த இணை சீன தைபே கலப்பு இரட்டையர் ஜோடி லின் யுன் ஜு செங் சிங் கோடியிடம் தோல்வி அடைந்தது.

  இந்திய ஜோடி 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட் கணக்கில் 27 நிமிடங்கள் விளையாடி தோல்வியைத் தழுவியது. ஆடிய நான்கு செட்களிலும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

 6. கொரோனா

  நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது என கூறப்பட்டுள்ளது.

  Follow
  next
 7. ஷர்மிளா

  தெலங்கானா மாநிலத்தில் ஒய் எஸ் ஆரின் நல்லாட்சியைக் கொண்டு வருவது தான் தங்கள் கட்சியின் நோக்கம் என கூறியுள்ளார் ஒய்.எஸ்.ஆரின் மகள் ஷர்மிளா.

  Follow
  next
 8. மார்க் ஸக்கர்பெர்க்

  உலகம், தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

  Follow
  next
 9. பிபிசி வீராங்கனை

  இந்த ஆண்டிற்கான போட்டியாளர்கள், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், தடகள வீராங்கனை தூத்தி சந்த், சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டனான ராணி ராம்பால்.

  மேலும் படிக்க
  next
 10. அர்ச்சனா காமத்:

  குழந்தை அழக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அர்ச்சனாவிடம் தோற்பார்களாம் அவரின் பெற்றோர். ஏனெனில், அப்போதுதான் அர்ச்சனா அழாமல் இருப்பாராம். சர்வதேச வீராங்கனையாக மகள் மாறியுள்ள போதிலும், அவருக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் முக்கிய நபர்களாக பெற்றோர் இருக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2